2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

நித்தியகல்யாணி ஜுவலரிக்கு ஜனாதிபதி விருது

Gavitha   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரியின் ஏற்றுமதி நிறுவனமான NJ Exports நிறுவனம் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறந்த ஏற்றுமதிக்கான ஜனாதிபதி விருது வழங்கும் விழாவில் ஆபரண பிரிவில் இலங்கையின் சிறந்த ஏற்றுமதியாளருக்கான 2014 மற்றும் 2015 ஆண்டுகளுக்கான ஜனாதிபதி விருதுகளை வென்றுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற   இந் நிகழ்வில் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏ.பி.ஜெயராஜா தன் குழுவினருடன் கலந்து கொண்டு இவ் விருதுகளைப் பெற்றுக் கொண்டார்.

உயர் தரத்துடன் கூடிய நவீன வடிவமைப்பிலான ஆபரணங்களை நம்பிக்கையுடன் கொள்வனவு செய்வதற்கு செல்ல வேண்டிய மிகச் சிறந்த இடமாக மக்கள் மனங்களை வென்றுள்ள வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி 1978ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. இந் நிறுவனமானது தங்க, வைர, இரத்தினக்கல் மற்றும் பிளட்டினம் ஆபரண உற்பத்தியின் மீது கவனம் செலுத்தி இலங்கை ஆபரணத் துறையில் முன்னிலை வகிக்கும் ஒரு சிறந்த நிறுவனமாக பெரு வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் 25,000 இக்;கும் மேற்பட்ட உன்னத வடிவமைப்புகளை தன் வசம் கொண்டுள்ளது.

வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரியின் ஏற்றுமதி நிறுவனமான NJ Exports தனது ஆபரண உற்பத்திகளை ஐக்கிய இராச்சியம், டுபாய், கனடா, சுவிட்சலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்து குறுகிய காலத்துக்குள் ஓர் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்துள்ளது. முற்றுமுழுதான மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள ஆபரண தொழிற்சாலை ஒன்றையும், நன்கு பயிற்சிப் பெற்ற நிபுணத்துவ அறிவைக் கொண்ட 100 இக்கும் மேற்பட்ட ஊழியர்களையும் வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி தன்னகத்தே கொண்டுள்ளது.

'3D Printing போன்ற புதிய தொழில்நுட்ப செயன்முறைகள் மூலம், வாடிக்கையாளர்களின் எண்ணத்தில் உதிக்கும் படைப்புகளை அதே பொலிவுடன் உற்பத்திச் செய்யக்கூடிய ஆற்றலைக் கொண்ட நித்தியகல்யாணி ஜுவலரியின் இந்த வெற்றியானது, நாம் ஒரே குழுவாகப் பணியாற்றியதால் கிடைத்த வெற்றி. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை உச்ச அளவில் வென்று எதிர்காலத்திலும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு நாம் தயாராக உள்ளோம்' என வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏ.பி.ஜெயராஜா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X