2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு Autoclaves இயந்திரங்கள் அன்பளிப்பு

S.Sekar   / 2022 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி அண்மையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நுண்ணுயிரிகள் மற்றும் வித்திகளைக் கொல்லும் வகையில் அதிக வெப்பமான நீராவியை உருவாக்குவதற்கு நீர், அழுத்தம் மற்றும் வெப்பத்தைப் பயன்படுத்தும் இரண்டு அழுத்த அனற்கல (Autoclaves) இயந்திரங்களை வழங்கியது. வைத்தியசாலையின் கோரிக்கைக்கு இணங்க இவை வழங்கப்பட்டுள்ளன.

 

இந்த அலகுகள் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கில் தொற்றுக் கட்டுப்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும். யாழ்ப்பாணத்தின் வடமராட்சி பிரதேசத்தில் சுமார் 150,000 பேருக்கு பருத்தித்துறை வைத்தியசாலை 'வகை ஏ' அடிப்படை வைத்தியசாலையாக சேவையாற்றி வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .