Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 01 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் சர்வதேச பாடசாலை விருதுகள் நிகழ்வின் இறுதி கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டிஆரச்சி மற்றும் பிரித்தானியாவின் உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டின் சகல பாகங்களையும் உள்ளடக்கி, அரசாங்கப் பாடசாலைகளைச் சேர்ந்த 170 பாடசாலை அதிபர்கள், 340 ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன், இதன் போது பல பிரிட்டிஷ் கவுன்சில் பாடசாலை தூதுவர்களுக்கு விசேட கௌரவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன.கடந்த 13 வருடங்களாக பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன கைகோர்த்து இயங்குவதுடன், பாடசாலைகளில் சர்வதேச பயிலல் மற்றும் ஒன்றிணைவு அனுபவத்தை ஊக்குவிக்கின்றன.
பிரிட்டிஷ் கவுன்சில் சர்வதேச பாடசாலை விருது (ISA) என்பது பாடசாலைகளில் பன்னாட்டு ஒற்றுமை உணர்ச்சியின் எடுத்துக்காட்டான செயன்முறைகளை கொண்டாடும் வகையிலும், கௌரவிக்கும் வகையிலும் அமைந்த திட்டமாக அமைந்துள்ளது. 54 நாடுகளில் முன்னெடுக்கப்படுவதுடன், சர்வதேச பாடசாலை விருது என்பது, சர்வதேச பாடசாலைகளுடன் இணைந்து புத்தாக்கமான வகையில் மாணவர்களுக்கு பயிலும் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்துள்ளது.
இதற்காக புத்தாக்க தொழில்நுட்பம், ஆக்கபூர்வமான தகவல் செயன்முறைகள் மற்றும் பயிலலுக்கான பிரயேக முறை போன்றன பயன்படுத்தப்படுகின்றன. பாடசாலைகளை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் சர்வதேச பாடசாலை விருது அமைந்துள்ளது.
பாடசாலைகளுக்காக பிரிட்டிஷ் கவுன்சிலின் சர்வதேச கல்வி நிகழ்ச்சித்திட்டமான வகுப்பறைகளை இணைத்தல் என்பதன் ஓர் அங்கமாகச் சர்வதேச பாடசாலை விருதுகள் அமைந்துள்ளன.
இளையவர்களுக்கு சர்வதேச ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன், 21ஆம் நூற்றாண்டில் சர்வதேச மட்டத்தில் போட்டிகரத்தன்மை வாய்ந்ததாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் திறனை கட்டியெழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதுடன், அதனூடாக தமது போதனை முறைகளில் பிரதானமாக, 21ஆம் நூற்றாண்டு திறன்களை உள்வாங்கி செயலாற்ற உதவுகிறது. இம்முறைகளில் ஆய்திறனுடனான சிந்தனை மற்றும் பிரச்சினைகளைத் தீர்த்தல், புத்தாக்கத்திறன் மற்றும் சிந்தனைத்திறன், டிஜிட்டல் அறிவு, குடியுரிமை, மாணவ தலைமைத்துவம் மற்றும் ஒன்றிணைவு, தொடர்பாடல் போன்றன அடங்கியுள்ளன.
சர்வதேச பாடசாலை விருதுகளில் பங்கேற்கும் பாடசாலைகள் கல்வி ஆண்டு ஒன்றுக்காக இயக்க திட்டம் ஒன்றை வடிவமைத்து தம்மை தயார்ப்படுத்தும். இதில் சர்வதேச நியமங்களுக்கமைய பல்வேறு பாடங்களையும் வயதையும் கவனத்தில் கொண்டு ஆகக்குறைந்தது ஏழு திட்டங்களை முன்னெடுக்கும்.
அவர்களின் பணியை பாடசாலைகள் பதிவு செய்து, ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும். இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை நடுவர்கள் குழு மதிப்பீடு செய்யும். மதிப்பீட்டு தேவையை வெற்றிகரமாக நிவர்த்தி செய்யும் பாடசாலைக்கு மூன்று ஆண்டுகளுக்காக தரப்படுத்தல் நிலை வழங்கப்படும்.
4 minute ago
1 hours ago
1 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
1 hours ago
21 Jul 2025