Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 25 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முதல் தர வங்கி சாரா நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனமாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது.
இந்நிறுவனத்தின் நீர்கொழும்புக் கிளை தனது 15 வருட பூர்த்தியை அண்மையில் கிளை வளாகத்தில் அனுஷ்டித்திருந்தது. இதில் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள், நீர்கொழும்பு கிளை முகாமையாளர் நலின் டி சில்வா, நீர்கொழும்பு கிளையின் வாடிக்கையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில், PLC நீர்கொழும்பு கிளையால் சமூகப் பொறுப்புணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்படி, நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு தொலைக்காட்சிப் பெட்டி அன்பளிப்பு செய்யப்பட்டது. இதை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்தரணசிங்க, பதில் பணிப்பாளர் டொக்டர் சுமித் அந்தனி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
2002 ஒக்டோபர் மாதம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த பீப்பள்ஸ் லீசிங் நீர்கொழும்பு கிளை, தற்போது 23 ஊழியர்களைக் கொண்டுள்ளதுடன், 2.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளைத் தன்வசம் கொண்டுள்ளது. கொழும்புக்கு வெளியே இயங்கும் சிறந்த கிளைகளில் ஒன்றாகவும் திகழ்கிறது.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 2,000 க்கும் அதிகமானோருக்கு லீசிங், நிதிசார் சேவைகளை இந்தக் கிளை வழங்கியுள்ளது.
நீர்கொழும்பு கிளையின் முகாமையாளர் நலின் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “சிறியளவில் செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த பீப்பள்ஸ் லீசிங், பரந்தளவு கிளைகளைக் கொண்டு நாடு முழுவதிலும் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் முதலாவது மாபெரும் நிதிச் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனமாக வளர்ச்சி யடைந்துள்ளது. மக்கள் வங்கியில் மூன்று ஊழியர்களுடன் பீப்பள்ஸ் லீசிங் தனது செயற்பாடுகளை முதன் முதலில் ஆரம்பித்திருந்தது. நீர்கொழும்பு கிளையும் இவ்வாறாகத்தான் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது. கடந்த 15 வருடங்களில், நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுடன் நெருக்கமான உறவை நாம் ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் வகையில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்” என்றார்.
1995ஆம் ஆண்டு PLC நிறுவப்பட்டிருந்தது. இது மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும்.
கம்பனியின் உயர் தர கடன் நியமத்துக்காக, Fitch ரேட்டிங் லங்காவால் AA-(lka) வழங்கப்பட்டுள்ளதன் மூலம், உயர்ந்த மட்டத் தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையைக் கொண்டுள்ளது. இலங்கையில் இரு சர்வதேச தரப்படுத்தல்களைப் பெற்ற ஒரே உள்நாட்டு நிதித் தாபனமாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது. இதில் ஒன்று Standard & Poor’s (‘B+/B’) க்கு நிகரானதாக அமைந்துள்ளது. மற்றையது Fitch ரேட்டிங் இன்டர்நஷனலின் ‘B’ தரப்படுத்தலாகவும் அமைந்துள்ளது.
PLC நிறுவனத்தின் விசேட நிதிச் சேவைகளில், லீசிங், நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், தனிநபர் மற்றும் வியாபார கடன்கள், இஸ்லாமிய நிதிச் சேவைகள் போன்றன அடங்குகின்றன.
இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ பினான்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியன காணப்படுகின்றன.
PLC நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பரந்தளவு நிதிசார் சேவைகளை வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு சகல சேவைகளையும் இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago