Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 22 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே.எல்.ரி.யுதாஜித்
பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான நிலைபேறான தன்மையை ஏற்படுத்துதல் தொடர்பான இரண்டு நாள் கலந்துரையாடல், மட்டக்களப்பு கிழக்கிலங்கை தன்நம்பிக்கை சமூக எழுச்சி நிறுவனத்தின் (எஸ்கோ) சத்துருக்கொண்டானிலுள்ள பயிற்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் பிரதம அதிதியாக, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டார்.
சுவிஸ் தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஸ்டெபனி பேலியட், புலம்பெயர்வு மற்றும் அபிவிருத்திப்பிரிவின் தலைமை அதிகாரி பெனில் தங்கராசா, சிரேஷ்ட தேசிய திட்ட அதிகாரி மதுசிகா லன்சேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சுவிஸ் அரசாங்கத்தின் அனுசரணையில் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான சுவிஸ் முகவர் அமைப்பின் நிதியுதவியில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பான புலம்பெயர்தல் சம்பந்தமான செயற்திட்டத்தில் தேசிய, மாவட்ட ரீதியில் முன்னெடுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்தே, இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கிழக்கிலங்கை தன்நம்பிக்கை சமூக எழுச்சி (எஸ்கோ) நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை எஸ்.பரித்தியோன் மேற்கொண்டிருந்தார்
தேசிய ரீதியான பங்காளிகளாக சர்வதேச தொழில் ஸ்தாபனம், புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு, ஐக்கிய நாடுகள் பெண்கள், செடெக் கரித்தாஸ், வெல்வற்றிஸ் ஆகிய நிறுவனங்களும் இத்திட்டத்தில் பணியாற்றுகின்றன. அதேபோன்று மாவட்ட ரீதியாக பிரிடோ - ஹற்றன், சுவோட்- அம்பாறை, சி.எச்.ஆர்.சி.டி - குருநாகல், கரித்தாஸ் செத் ரெண- கொழும்பு, எஸ்.கோ - மட்டக்களப்பு ஆகிய நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன.
சுவிஸ் தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஸ்டெபனி பேலியட்டின் பங்களிப்புடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், பாதுகாப்பாகப் புலம்பெயர்வதை உறுதிப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
சட்டரீதியான முறையில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள தொழிலாளர்களது நலன்கள், அவர்களது தேவைகள், உரிமைகள் தொடர்பில் செயற்பட்டுவரும் இந் நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்ற திட்டங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.
அத்துடன், இச்செயற்பாட்டின் மேம்பாட்டுக்கு அரச நிறுவனங்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் என்பவற்றுடன் இணைந்து என்ன வகையான பங்களிப்பை நிறுவனங்கள் மேற்கொள்ள முடியும். அதேநேரத்தில், எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
13 minute ago
46 minute ago
51 minute ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
46 minute ago
51 minute ago
21 Jul 2025