2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவும் பிரத்தியேகத் திட்டம் ‘SDB உத்தமி’

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மொத்த சனத்தொகையில் அரைப்பங்குக்கும் அதிகமானவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர். தேசிய பொருளாதாரத்துக்கும் இவர்கள் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்குகின்றனர்.

2014 ஆம் ஆண்டு குடிசனமதிப்பீட்டின் பிரகாரம், இந்தப் பங்களிப்புகளின் பெருமளவானவை, பெண் தொழில்முயற்சியாண்மை ஊடாக பெறப்படுவதாகவும், இலங்கையில் காணப்படும் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சிகளில் 25% க்கும் அதிகமானவை பெண்களால் நிர்வகிக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டிருந்தது. ஆனாலும், இதில் 6.1% ஆன பெண்கள் மட்டுமே நடுத்தரளவு வியாபார நிலைக்கு முன்னேற்றம் காண்கின்றனர். 4.6% ஆன பெண்கள் மட்டுமே பாரிய தொழில்முயற்சி நிலைக்கு முன்னேறுகின்றனர்.  

பெண்களின் தொழில்முயற்சியாண்மை இந்த மெதுவான வளர்ச்சியைப் பதிவு செய்வதை, வங்கித்துறை கண்டு கொள்வதில்லை. பெண்களுக்கு சேமிப்பு கணக்குகள் சார்ந்த தீர்வுகளையும் அனுகூலங்களையும் பாரம்பரியமாக வங்கிகள் வழங்கி வருகின்றன. ஆனாலும் பெண்கள் தலைமைத்துவம் வகிக்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சி பிரிவில் ரூ. 50 பில்லியன் கடன் இடைவெளி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சி தொடர்பில் உறுதியாக கவனம் செலுத்தும் SDB வங்கி இந்தக் கடன் இடைவெளியை இனங்கண்டு, பெண் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான பிரத்தியேகமானத் திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. ‘SDB உத்தமி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தினூடாக, பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு தமது வியாபாரங்களை மேம்படுத்திக்கொள்ளவும், சுபீட்சத்தை எய்தவும் நிதிசார் உதவிகள் வழங்கப்படுகின்றன.  

SDB வங்கியின் வியாபார பிரிவின் தலைமை அதிகாரி திருமதி. டெல்ரின் செனெவிரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “SDB உத்தமி என்பது பெண் தொழில்முயற்சியாளர்களை விருத்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட பரிபூரண நிதிசார் தீர்வாகும். நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சி துறையில் காணப்படும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாம் எதிர்பார்க்கிறோம். இதனூடாக, அவர் முன்னேற்றம் கண்டு, நடுத்தரளவு மற்றும் பாரிய துறைகளுக்கு செல்வார்கள். சேமிப்பினூடாக மாத்திரம் இதை எய்த முடியாது என்பதை நாம் அறிவோம்” என்றார்.  

உத்தமி திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கு வங்கியினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய இரு உத்தரவாதமளிப்பவர்கள் தேவைப்படுகின்றனர். பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு கடன் தொகையை பெற்றுக் கொண்டு அவற்றை முறையாக மீளச் செலுத்தி வரும் நிலையில் ஆறு மாதங்கள் கடந்த பின்னர் தாம் பெற்றுக் கொண்ட கடன் தொகையில் 10% வரை அவசர நிதிச் தேவைகளு க்காக பெற்றுக் கொள்ளக்கூ டிய வசதியும் வழங்கப்படுகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X