2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பீடியா ப்ளஸ் Pedia Plus பரிசுகள்

Gavitha   / 2016 ஒக்டோபர் 11 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

1 முதல் 7 வயதுக்குட்பட்ட வளரும் குழந்தைகளுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட ஒரு முன்னணி பால் மா உற்பத்தியான பீடியா ப்ளஸ், முன்னெடுத்திருந்த “Gift Galore” (பரிசு மழை) என்ற நுகர்வோர் ஊக்குவிப்புப் பிரச்சாரத்தில் வெற்றியீட்டியவர்களின் விபரங்களை அண்மையில் அறிவித்துள்ளது.

நுகர்வோர் நீண்ட காலமாக காண்பித்து வந்துள்ள விசுவாசத்திற்கு வெகுமதியளிக்கும் வகையில் அவர்களுடன் இடைத்தொடர்புகளைப் பேணுவதுக்கும் இடமளிக்கும் வகையில், இந்தச் சமீபத்தைய ஊக்குவிப்பு பிரச்சாரம் விசேடமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கிடைக்கப்பெற்ற பரிசுகளையிட்டு குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், தமது பிள்ளைகளை உற்சாகப்படுத்தியுள்ள உயர் தரத்திலான உற்பத்தியை பெற்றோர்கள் பாராட்டியுள்ளனர்.   

“எங்கள் மீது மிகவும் ஆழமான விசுவாசத்தைக் கொண்டுள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதியளிக்க முடிந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். சமீபத்தைய ஊக்குவிப்பு பிரச்சாரம் தொடர்பில் அவர்கள் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் மிகவும் உற்சாகமளிக்கின்றன.

பரிசுகளை சேகரித்த பெற்றோர்கள் தமது குழந்தைகள் பீடியா ப்ளஸ் உற்பத்தியை அருந்தி மகிழ்வது மட்டுமன்றி, தொடர்ந்தும் தினசரி அதனைக் கேட்கின்றனர் என்பதை எம்மிடம் கூறியிருந்தனர். தமது குழந்தைகளுக்கு சிறப்பாக ஊட்ட உதவியுள்ளமைக்காக அவர்கள் பீடியா ப்ளஸ் இற்கு தமது நன்றிகளையும் வெளிப்படுத்தியிருந்தனர்,” என்று Sunshine Healthcare Lanka நிறுவனத்தின் உற்பத்திப்பிரிவு முகாமையாளரான விந்தியா மென்டிஸ் அவர்கள் குறிப்பிட்டார்.   

SMS அடிப்படையிலான இந்த ஊக்குவிப்பு பிரச்சாரமானது இரு மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு, ரிமோட் கொன்ட்ரோல் கட்டுப்பாட்டு முறையில் இயங்கும் விளையாட்டு கார்கள் முதல் 75 வேறுபட்ட கற்றல் அம்சங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான கற்றல் மடிகணினிகள் வரை ஏராளமான வியப்பூட்டும் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தது. இந்த ஊக்குவிப்பு பிரச்சாரத்தில் நுழைவதற்கு, வாடிக்கையாளர்கள் தமது சுரண்டும் அட்டையின் இலக்கத்துடன், வெல்ல விரும்புகின்ற பரிசின் பெயரைக் குறிப்பிட்டு செய்தி வடிவில் அனுப்புமாறு கேட்கப்பட்டிருந்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X