2025 ஜூலை 30, புதன்கிழமை

பாதுகாப்பு சேவைக்கான மொபைல் அப்ளிகேஷன்

Gavitha   / 2016 நவம்பர் 27 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய பாதுகாப்ச் சேவை மற்றும் மொபைல் அப்ளிகேஷனை M3Force அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. “Commando on Cal” எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷன், தனிநபர்கள் தாம் ஆபத்தில் உள்ளதாக உணரும் சந்தர்ப்பத்தில் அல்லது ஆபத்தை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் அவர்களின் பாதுகாப்புக்காக, முறையான பயிற்சிகளைப் பெற்ற கொமான்டோக்களைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. நாடு முழுவதையும் சேர்ந்த இணையப் பாவனையாளர்கள் தமது மொபைல் சாதனங்களில் “Commando on Cal” எனும் அப்ளிகேஷனைத் தரவிறக்கும் செய்து தற்போது இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.  

இலங்கை கண்காட்சி மற்றும் மாநாடுகள் நிலையத்தில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச தீ, தொழிற்துறை பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு கண்காட்சியின் போது இந்த அறிமுகம் நடைபெற்றது. M3Force தலைவர் விஜித வெலிகல இந்த அப்ளிகேஷனை அறிமுகம் செய்திருந்தார். நிறுவனத்தின் சேவை வழங்கல்களை இந்த அப்ளிகேஷன் மேம்படுத்தியுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த, மாற்றியமைத்துக்கொள்ளக்கூடிய பாதுகாப்புத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகத் தமது அர்ப்பணிப்பையும், சிறந்த வாடிக்கையாளர் சேவையையும் மேலும் உறுதி செய்துள்ளது.  

விஜித வெலிகல கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் காணப்படும் முன்னணி பாதுகாப்பு சேவை வழங்குநர் எனும் வகையில், சமூகத்தில் அதிகரித்துவரும் பாதுகாப்புத் தேவைகளை இனங்காண்பதுடன், அவற்றுக்குப் புத்தாக்கமான வகையில் தீர்வுகளை வழங்குவது எமது இலக்காகும். Commando on Call விசேட பாதுகாப்புச் சேவை என்பதுடன், நவீன தொழில்நுட்பத்தையும், முறையான பயிற்சிகளைப் பெற்ற பாதுகாப்பு நிபுணர்களின் பிரத்தியேக சேவையையும் ஒன்றிணைத்து வழங்குகிறது. இந்தச் சேவை நாம், எமது வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தியேகப் பாதுகாப்புக்காகத் தொடர்ச்சியாக வழங்கி வரும் பாதுகாப்புச் சேவைகளின் மற்றுமொரு வெளிப்பாடாக அமைந்துள்ளது” என்றார்.  

மேலும், நபர் ஒருவர் ஆபத்தை எதிர்கொள்ள நேர்ந்தால், தமது கையடக்க சாதனத்திலுள்ள ஒரு பொத்தானை அவர்கள் அழுத்தியவுடன், அவர்கள் M3Force கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படுவார்கள். இந்தக் கோரிக்கை உடன், வாடிக்கையாளருக்கு மிக அண்மையில் காணப்படும் கொமான்டோவுக்கு அனுப்பி வைக்கப்படும். சில நொடிப்பொழுதில் அவர்கள் அந்தக் கோரிக்கையை ஏற்று, வாடிக்கையாளர் இருக்கும் பகுதிக்கு விரைவார்கள். மேலும், வெவ்வேறு பகுதிகளை கண்காணிக்கும் வகையிலான GPS வசதியையும் கொண்டிருக்கும். இதன் மூலம் M3Force கட்டுப்பாட்டறைக்கு செயற்பாடுகளைக் கண்காணிப்பதுடன், அவசியமான சகல உதவிகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு உடன் நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவியாக அமையும். மேலும், வயது முதிர்ந்தவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான பயணச் சேவை மற்றும் பல தேவைகளுக்கு “Commando on Call” சேவைகளை வழங்கும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .