Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 26 , பி.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சணச அபிவிருத்தி வங்கி தனது புதிய வர்த்தக நாமச்சின்னத்தை அறிமுகம் செய்துள்ளது. மக்களுக்கு மிகவும் பரந்தளவு சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதுக்காக தமது நிறுவனத்தினுள் விசேட மாற்றங்கள் பலதை மேற்கொள்ள வங்கி அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது. இதில் மற்றுமொரு அங்கமாக, தனது புதிய அடையாளத்தை நன்கு உறுதி செய்யும் வகையில், இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதனூடாக தனது செயற்பாடுகளை மிகவும் உறுதியாக முன்னெடுத்துச்செல்வதாகவும் வங்கி அறிவித்துள்ளது.
வெளிப்புற அடையாளமாக இலச்சினை மாறுபட்ட போதிலும், வங்கியின் பதிவு நாமத்துக்கு எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படமாட்டாது என்பதுடன், இதுவரை கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ளமை, புதிய இலச்சினையை அறிமுகம் செய்வதில் தாக்கம் செலுத்திய பிரதான காரணியாக அமைந்திருந்ததாக SDB அறிவித்துள்ளது.
புதிய இலச்சினையுடன் இதுவரையில் நுண் நிதியியல் சேவைகளை வழங்குவதில் தன்னை ஈடுபடுத்தியிருந்த சணச அபிவிருத்தி வங்கி, சிறு வியாபார வங்கியாக மாற்றமடைந்து, நுண், சிறு மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களுக்கான வங்கியாக (MSME Bank) நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக இந்த வங்கி, உலக வங்கியின் பிரத்தியேக செயற்பாடுகள் பிரிவான சர்வதேச நிதி நிறுவனத்துடன் (SDB) கைகோர்த்துள்ளது. இந் நிகழ்ச்சிக்கு மேலதிகமாக, வங்கியின் செயற்பாடுகள் மற்றும் சேவைகளுக்காக புதிய பல பெறுமதிகள் சேர்க்கப்படவுள்ளன.
SDB நீண்ட காலமாக இலங்கையர்களுக்கு நிதித்தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதுக்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட வங்கியாகும். பாரம்பரிய வங்கித்துறையின் மூலம் நிதிச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியிருந்த, குறிப்பாக கிராமிய மட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு நுண் நிதியியல் கடன் வசதி போன்றவற்றை பெற்றுக்கொடுப்பதனூடாக இந்நாட்டின் வங்கித்துறைக்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்திய வங்கியாக SDB ஐ குறிப்பிட முடியும்.
19 வருடங்களாக இந்த விசேட செயற்பாடுகளினூடாக ஆயிரக்கணக்காக மக்களுக்கு பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுக்கு இந்த வங்கி பக்கபலமாக அமைந்துள்ளதுடன், அதன் விளைவாக நாட்டின் பொருளாதாரத்துக்கும் வழங்கிய அளப்பரிய சேவையாகவும் குறிப்பிட முடியும். மக்களுக்கு வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்கு வழிகாட்டிய வங்கி என SDB பெற்றுள்ள கீர்த்தி நாமம், வங்கியின் செயற்பாடுகளுக்கும் அதன் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக அமைந்துள்ளது.
13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago