2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பார்ம்கோ இன்ட்ஸ்ரிட்க்கு ISO GMP 22716:2007 சான்று

Gavitha   / 2016 ஒக்டோபர் 11 , பி.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பார்ம்கோ இன்டஸ்ரி (பிரைவட்) லிமிட்டெட், இலங்கையில் வேறு எந்த நிறுவனத்துக்கும் வழங்கப்படாத ISO 22716:2007 சான்றை பெற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் பார்ம்கோ உற்பத்திகள் அனைத்தும் சிறந்த உற்பத்தி செயன்முறைகள் மற்றும் தூய்மை நிலைகளுக்கமைய உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சகல பரிசோதனை முறைகள், ஊடாக சந்தைக்கு விற்பனைக்காக வெளியிடப்படும் பொருட்கள் உயர் தரம் வாய்ந்தவையாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

ரீபொன் கொஸ்மெடிக்ஸ் குழுமத்தின் சவர்க்கார உற்பத்தி பிரிவாக பார்ம்கோ இன்டஸ்ரீஸ் (பிரைவெட்) லிமிட்டெட் காணப்படுகிறது. இந்நிறுவனத்தின் மூலமாக பல பல்தேசிய மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் விற்பனைக்கு சவர்க்காரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பார்ம்கோ ஏக்கல, ஜா-எல யில் அமைந்துள்ள தனது உற்பத்தி மற்றும் களஞ்சியப்படுத்தல் தொழிற்ச்சாலைக்கு ISO GMP 22716:2007 மற்றும் ISO GMP 9001:2007 சான்றுகளை பெற்றுள்ளது.  

இந்த நிறுவனம் எஸ்.சிவராஜா என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது. வேகமாக வளர்ந்து வரும் தொழில் முயற்சியாளர்களில் ஒருவராக இவர் திகழ்வதுடன், சவர்க்கார உற்பத்தித்துறையில் உறுதியான அனுபவத்தையும் கொண்டுள்ளார்.  இந்த தொழிற்சாலையில் 100க்கும் அதிகமான தொழிற்சாலை ஊழியர்கள், இரசாயன பரிசோதக நிபுணர்கள் மற்றும் ஏயைன நிபுணர்கள் காணப்படுகின்றனர்.  

பார்ம்கோ இன்டஸ்ரீஸ் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.சிவராஜா இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது, ‘எமக்கு ISO GMP 22716:2007 சான்றிதழ் கிடைத்துள்ளமை பற்றி அறிந்து கொள்வதுரும்மகிழ்ச்சியளிக்கிறது.

இலங்கையில் முதல் தடவையாக குளியல் மற்றும் சலவை சவர்க்காரங்கள் தயாரிக்கும் தொழிற்ச்சாலைக்கு இந்த சான்று கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது’ என்றார்.இந்தச் சாதனை தொடர்பில் நாம் மிகவும் பெருமையடைகிறோம். இந்த சான்றை பெற்றுள்ள ஒரே நிறுவனம் எனும் வகையில், எமக்கு பக்கபலமாக உள்ள எமது சகல பங்காளர்களுக்கும் நாம் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X