2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

புற்றுநோயாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் Can- Sur-Vive

Gavitha   / 2017 பெப்ரவரி 14 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஏற்பாடு செய்யப்படும் பெண்களுக்கு மார்பு புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வின் போது மார்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த பெண்கள், வெவ்வேறு நிலைகளைச் சேர்ந்த பெண்கள் ஆகியோர் ஒன்றுகூடி, வெவ்வேறு மருத்துவ மற்றும் வாழ்க்கைத்தர சிக்கல்கள் குறித்து நிபுணர்கள் குழுவினருடன் கலந்துரையாடுவார்கள்.  

பெப்ரவரி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ஜெட்விங் குழுமத்துடன் Can-Sur-Vive ஒன்றிணைந்து 5ஆவது “CAN SUR VIVE” சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சியை 2016 ஜனவரி 28ஆம் திகதி லங்கா ஹொஸ்பிட்டலில் ஏற்பாடு செய்திருந்தது.  

இந்தப் பயிற்சிப்பட்டறையின் மூலமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மருத்துவ, உடலியல், நிதியியல், உளவியல் மற்றும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர் ஒருவர் நாளாந்தம் எதிர்கொள்ளும் விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்து, அவர்கள் மத்தியிலும், அவர்களின் குடும்பத்தார் மத்தியிலும் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புவது நோக்காக அமைந்துள்ளது. இந்தப் பயிற்சிப்பட்டறையின் போது, வைத்திய ஆலோசகர்களின் விரிவுரைகள் வழங்கப்படுகிறது. இதில் புகழ்பெற்ற வைத்திய நிபுணர்களும், நிதிசார் ஆலோசகர்கள், சமூகவியலாளர்கள், உடலியக்க சிகிச்சையாளர்கள், உளவியலாளர்கள், மதகுருமார்கள் மற்றும் தொழில்சார் சிகிச்சையாளர்கள் போன்றோர் உள்ளடங்கியுள்ளனர்.  

ஜெட்விங் குழுமத்தின் தலைவர் ஹிரான் கூரே கருத்துத் தெரிவிக்கையில், “புற்றுநோய் என்பது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய பாரதூரமான நோய் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. ஆனாலும், நோயாளர்களுக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளாக, போதியளவு விழிப்புணர்வின்மை, அதன் மீது அதீத அக்கறை மற்றும் அக்கால கட்டத்தில் அவர்களுக்கு கிடைக்கும் உதவி போன்றன அமைந்துள்ளன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் கூட, மருந்துகளால் மட்டுமின்றி தமது சுயநம்பிக்கை காரணமாக அதிகளவு குணமடைந்துள்ளனர். CAN-SUR-VIVE நம்பிக்கை நிதியத்துடன் ஜெட்விங் கைகோர்த்து செயலாற்றி வருகிறது. பிரத்தியேகமான செயலமர்வுகளின் ஊடாக நோயாளர்களுக்கும், குணமடைந்தவர்களுக்கும் விழிப்புணர்வூட்டும் அவர்களின் செயற்பாடுகளை நாம் பெருமளவு வரவேற்கிறோம். அவர்களின் அர்ப்பணிப்பின் மூலமாக, எவரும் ஒருபோதும் தனித்து இருப்பதில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூகம் எனும் வகையில், நீங்கள் எப்போதும் உங்களுக்கு தேவையான உதவிகளைப் பெறுவீர்கள்” என்றார்.  

பயிற்சிப்பட்டறையில் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் ஒன்கொலொஜிகல் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர். நயோமல் பெரேரா தனது விளக்கத்தை வழங்கும் போது, மார்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் வாழ்க்கை மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்கு என்பதை விளக்குவதாக அமைந்திருந்தது. Can-Sur-Vive நம்பிக்கை நிதியம் கடந்த ஒரு ஆண்டு காலமாக முழுமையாக இயங்கி வருகிறது. பிரதானமாக குணமடைந்தவர்களுக்கு அனுகூலங்களை சேர்க்கும் வகையில் இந்த அமைப்பு இயங்கி வருவதுடன், மேலும் குணமடைந்தவர்களை இணைத்துக் கொண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதை நோக்காகக் கொண்டுள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X