Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இடர் பொறுப்பு காப்புறுதியை A தரப்படுத்தப்பட்ட லண்டனின் லொயிட்ஸ் சின்டிகேட்ஸ் நிறுவனத்துக்குத் தாம் மாற்றியுள்ளதாக கிரெசன்ட் குளோபல் தென் ஆசியா நிறுவனம் அறிவித்துள்ளது.
காப்புறுதிச் சந்தை செயற்பாடுகளுக்கமைய, உள்நாட்டு காப்புறுதிதாரரான தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம், இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனத்தின் 100% இடரை தன்வசம் கொண்டிருக்காது. லொயிட்ஸ் சந்தைகளினால் இந்தக் காப்பீட்டுக்கு பங்களிப்பு வழங்கப்படுவது மட்டுமின்றி, சிங்கப்பூர் மற்றும் சர்வதேச மரைன் மற்றும் வலுக்காப்புறுதி சந்தைகளின் முன்னணி மீள் காப்புறுதிதாரர்களையும் இணைத்து வழங்குகிறது.
மீள் காப்புறுதி சந்தையில் காணப்படும் முன்னோடிகளின் உதவியை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பயன்படுத்துவதுடன், பரிபூரண இடர் ஆய்வு, காப்புறுதி செய்யப்பட்ட சொத்தின் இடர் தரத்தை மேம்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்ளும். இந்த A -தரப்படுத்தப்பட்ட பிணைகளின் பரிந்துரைகளின் மூலமாக, எதிர்காலத்தில் எழக்கூடிய நட்டஈடுகளின் அளவை குறைத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த நியமத்தின் இடர் மதிப்பீடு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக மசகு எண்ணெய் போன்ற தளம்பல் தன்மைக் கொண்ட பொருளை கையாளும் போது, அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரி.ஜி.ஜயசிங்க கருத்துத்தெரிவிக்கையில், “புத்தாக்கம் என்பதை கவனத்தில் கொள்ளாமல் அனைவரும் ஒழுங்குபடுத்தல் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர். சரியான செயற்பாடுகளையும், அத்தியாவசியமான கடுமையான செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும். உதாரணமாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற அமைப்புகளுக்கு கட்டாயமான காப்பீடுகள் எதுவுமில்லை. ஆனாலும், தற்போது இடர் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதுடன், பொறுப்பு என்பதும் லொயிட்ஸ் சின்டிகேட்ஸ் நிறுவனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலமாகத் தவணைக்கட்டணங்களில் பெருமளவு சேமிப்பைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்றார்.
முன்னர் நட்டஈடுகளைப் பெற்றுக்கொள்வதில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தது. ஏனெனில் மேற்கொள்ளப்பட்டிருந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் நிபுணத்துவம் வாய்ந்த கையாள்கைகள் மற்றும் செயன்முறைகள் அற்றதாக அமைந்திருந்தன. இது தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவர் மஞ்சுள டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமொன்றின் காப்புறுதியை ஃபிட்ச் தரப்படுத்தல் மற்றும் தேசிய நீண்ட கால தரப்படுத்தலான AA-(lka) ஆகியன வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, எமக்கு கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, இது இலங்கையில் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தை முன்னணி காப்புறுதியாளராகவும் திகழ உதவியாக அமைந்துள்ளது” என்றார்.
59 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
2 hours ago