2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

முதற்தர தொலைக்காட்சி வர்த்தக நாமமாக Samsung சாதனை

Janu   / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தொலைக்காட்சித் துறையில் தனது அசைக்க முடியாத தலைமைத்துவத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தும் வகையில், சாம்சங் இலெக்ட்ரானிக்ஸ் (Samsung Electronics) நிறுவனம் தொடர்ச்சியாக 20-வது ஆண்டாகவும் உலகின் முதற்தர தொலைக்காட்சி பிராண்டாக வர்த்தக நாமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலகளாவிய மைல்கல் சாதனையை Samsung Sri Lanka விமர்சையாகக் கொண்டாடுகின்றது.

இது தொலைக்காட்சித் துறையில் Samsung இன் தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், அதன் புத்தாக்கம், சிறந்த செயல்திறன் மற்றும் அதிநவீன திரைத் தொழில்நுட்பம் மீதான தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றது.

சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஓம்டியாவின் (Omdia) தரவுகளின்படி, Samsung நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் வருவாயின் அடிப்படையில் 29.1 சதவீதப் பங்கினைப் பெற்று, உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் Samsung முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்தது முதல், தற்போது இரண்டு தசாப்தங்களாகத் தொடர்ந்து தனது தலைமைத்துவத்தை நிலைநாட்டி வருவதை இந்தச் சாதனை பறைசாற்றுகின்றது.

இலங்கை வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, இந்த மைல்கல்லானது Samsung இன் உள்ளூர் தொலைக்காட்சித் தயாரிப்புகளைத் தொடர்ந்து வடிவமைத்து வரும் அதே உலகளாவிய புத்தாக்கம் மற்றும் நம்பகமான செயல்திறனைப் பிரதிபலிக்கிறது. இது நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு மேம்பட்ட திரை அனுபவங்களைக் கொண்டு சேர்ப்பதை உறுதிப்படுத்துகின்றது.

தொலைக்காட்சித் துறையில் Samsung நிறுவனம் கொண்டுள்ள அசைக்க முடியாத தலைமைத்துவமானது, அந்நிறுவனம் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வரும் தொடர்ச்சியான புரட்சிகரமான புத்தாக்கங்களால் அடையாளப்படுத்தப்படுகிறது.

2006 ஆம் ஆண்டில், வடிவமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் தனது 'போர்டோ' (Bordeaux) ரகத் தொலைக்காட்சி மூலம் Samsung முதன்முறையாக உலகளாவிய ரீதியில் முதலிடத்தைப் பிடித்தது. இது வீட்டுப் பொழுதுபோக்குத் துறையில் ஒரு புதிய பரிமாணத்தையும், நேர்த்தியான தோற்றத்தையும் அறிமுகப்படுத்தியது. அன்றிலிருந்து இன்று வரை, படத்தின் தரம், வடிவமைப்பு மற்றும் இலகுவான இணைப்பு வசதிகள் ஆகியவற்றின் எல்லைகளை அடுத்த கட்டத்திற்குக்கொண்டு செல்லும் முன்னோடித் தொழில்நுட்பங்களை Samsung தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றது.

2009 ஆம் ஆண்டில், மெல்லிய வடிவமைப்பு, மேம்பட்ட மின்சாரச் சிக்கனம் மற்றும் மிகச்சிறந்த காட்சித்தரம் ஆகியவற்றை உள்ளடக்கிய LED தொலைக்காட்சிகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், உலகளாவிய ரீதியில் LED தொழில்நுட்பத்தை நோக்கிய மாற்றத்தை Samsung நிறுவனம் துரிதப்படுத்தியது.

2011 ஆம் ஆண்டளவில் ஸ்மார்ட் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் அறிமுகமானது, தொலைக்காட்சிகளை வெறும் திரைகளாக மட்டும் வைத்திருக்காமல், இணையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு முழுமையான பொழுதுபோக்கு மையமாக உருமாற்றியது. இதன் மூலம் ஸ்ட்ரீமிங் சேவைகள் (Streaming services), செயலிகள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் உள்ளடக்கங்களை பயனாளர்கள் நேரடியாகத் தமது திரையின் ஊடாகவே அணுகுவதற்கான வசதி முதன்முதலாக ஏற்படுத்தப்பட்டது.

Samsung நிறுவனம் வீட்டு உட்புற அலங்காரத்திலும் (Home interiors) தொலைக்காட்சியின் பங்களிப்பை புதிய உயரத்திற்குக்கொண்டு சென்றது. அந்த வகையில், 2015 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 'The Serif' வகை தொலைக்காட்சிகள், வீட்டின் ஏனைய அலங்காரங்களுடன் கச்சிதமாக ஒன்றிப்போகும் வகையில் ஒரு கலைநயமிக்க வடிவமைப்பாக உருமாற்றப்பட்டன. இந்த எண்ணக்கரு 2017 ஆம் ஆண்டில் 'The Frame' எனும் அறிமுகத்தின் மூலம் மேலும் வளர்ச்சியடைந்து, 'ஆர்ட் டிவி' (Art TV) எனும் புதிய பிரிவை அறிமுகப்படுத்தியது. இது தொலைக்காட்சி பயன்பாட்டில் இல்லாத நேரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட டிஜிட்டல் கலைப்படைப்புகளைத் திரையில் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.

தொழில்நுட்ப ரீதியாக, காட்சித்தரத்தை மேம்படுத்துவதில் Samsung தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. அந்த வகையில், 2017 ஆம் ஆண்டில் குவாண்டம் டொட் (Quantum dot) தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட QLED வகை தொலைக்காட்சிகள், திரையின் பிரகாசம், துல்லியமான நிறங்கள் மற்றும் நீடித்து நிலைக்கும் தன்மை ஆகியவற்றில் புதியதொரு தரநிலையை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் 8K ரகத் தொலைக்காட்சிகளின் அறிமுகத்துடன் தொழில்நுட்ப ரீதியில் மேலும் பல புரட்சிகரமான முன்னேற்றங்கள் எட்டப்பட்டன. இவை 33 மில்லியனுக்கும் அதிகமான பிக்சல்களுடன் (Pixels) மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட காட்சி அனுபவத்தை வழங்கின.

2020 ஆம் ஆண்டில், சாம்சங் 'மைக்ரோ எல்இடி' (MICRO LED) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. குறிப்பாக வியக்கத்தக்க பிரகாசம், தெளிவான ஒளித்திறன் மற்றும் துல்லியமான வண்ணத்திறனுடன், சுயமாக ஒளியை உமிழும் (self-emissive) திரைகளின் புதிய யுகத்தை இது குறிக்கிறது. இது குறிப்பாக மிகப்பெரிய திரைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Samsung நிறுவனத்தின் உலகளாவிய தலைமைத்துவமானது, குறிப்பாக பிரீமியம் தொலைக்காட்சிப் பிரிவில் மிகவும் தெளிவாகப் புலப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டில், 2,500 அமெரிக்க டொலர்களுக்கும் அதிக விலையுள்ள தொலைக்காட்சிகளுக்கான உலகளாவிய சந்தையில் 54.3 சதவீதப் பங்கினை Samsung தன்வசம்கொண்டிருந்தது. அதேவேளை, 1,500 அமெரிக்க டொலர்களுக்கும் அதிக விலையுள்ள பிரிவிலும் 52.2 சதவீத சந்தைப் பங்கினைப் பெற்று அந்நிறுவனம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.

இந்த உத்வேகத்தைத் தொடர்ந்து, Samsung நிறுவனம் தனது பிரீமியம் ரகத் தொலைக்காட்சிப் பிரிவை அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் மேலும் வலுப்படுத்தி வருகிறது. குறிப்பாக, Neo QLED, OLED மற்றும் அடுத்த தலைமுறை திரைத் தொழில்நுட்பங்களில் புகுத்தப்படும் புத்தாக்கங்கள் ஊடாக தனது தயாரிப்பு வரிசையை அந்த நிறுவனம் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. அந்நிறுவனம் திரைத் தொழில்நுட்பப் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமான மைக்ரோ ஆர்ஜிபி (Micro RGB) தொழில்நுட்பத்தையும் முன்னெடுத்து வருகின்றது. அதேவேளை, பெரிய திரை அளவுகள், மேம்படுத்தப்பட்ட பிரகாசம் மற்றும் ஆழமான மாறுபட்ட ஒளித்திறன் (Deeper contrast) ஆகிய வசதிகளுடன் தனது Neo QLED மற்றும் OLED தயாரிப்பு வரிசைகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றது.

Samsung இன் மினி எல்இடி (Mini LED) தொழில்நுட்பமானது தற்போது அதிகளவிலான மாதிரிகளில் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது. இது மிகவும் துல்லியமான பின்னொளி கட்டுப்பாட்டை (Backlight control) சாத்தியமாக்குவதுடன், பல்வேறு திரை அளவுகளிலும் மற்றும் வெவ்வேறு விலை வரம்புகளிலும் மேம்பட்ட படத்தரத்தை வழங்குகின்றது.

Samsung இன் அண்மைக்கால புத்தாக்கங்களின் ஒரு முக்கிய அம்சமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தொலைக்காட்சிகளில் ஒருங்கிணைப்பதாகும். இதில் இடம்பெற்றுள்ள மேம்பட்ட செயலிகள் மற்றும் நுண்ணறிவு படிமுறைத் தீர்வுகள் நிகழ்நேரத்திலேயே படத்தின் தரம் மற்றும் ஒலித்திறனைச் சீரமைப்பதோடு, பயனர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட ஒரு சிறந்த திரை அனுபவத்தையும் வழங்குகின்றன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் இயங்கும் இந்தத் தொலைக்காட்சிகள், திரையில் ஓடும் காட்சிகளின் தன்மைக்கேற்ப அதன் பிரகாசம், ஒளித்திறன் மற்றும் தெளிவுத்திறனைத் தானாகவே மேம்படுத்துகின்றன. அத்துடன், நாம் பார்க்கும் உள்ளடக்கத்திற்கு ஏற்ப ஒலியின் வெளியீட்டையும் இவை நுணுக்கமாக மாற்றியமைக்கின்றன. இத்தகைய மேம்பட்ட வசதிகள், பயனாளர்களுக்கு மிகவும் ஆழ்ந்த மற்றும் இயல்பான பொழுதுபோக்கு அனுபவத்தை உருவாக்குகின்றன.

Samsung நிறுவனம் உலகின் முன்னணி தொலைக்காட்சி வர்த்தக நாமமாக 20 ஆண்டுகளைக் கொண்டாடும் இவ்வேளையில், Samsung Sri Lanka அண்மைக்காலப் புத்தாக்கங்களைத் தொடர்ந்து உள்ளூர் சந்தைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றது. இதன் மூலம் பல்வேறு வாழ்க்கை முறைகள், வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் பொழுதுபோக்கு விருப்பங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பலதரப்பட்டத் தொலைக்காட்சி மாதிரிகளை Samsung Sri Lanka வழங்கி வருகின்றது.

உயர்தர Neo QLED மற்றும் OLED திரைகள் முதல், வடிவமைப்புக்கு முன்னுரிமை அளிக்கும் 'லைஃப்ஸ்டைல்' (Lifestyle) தொலைக்காட்சிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஸ்மார்ட் மாதிரிகள் வரை, Samsung இன் தயாரிப்பு வரிசையானது அந்த வர்த்தக நாமத்தின் உலகளாவிய வெற்றியைத் தீர்மானித்துள்ள அதே பொறியியல் சிறப்பு மற்றும் தொலைநோக்குத் தொழில்நுட்பத்தைப் பிரதிபலிக்கின்றது.

பல தசாப்த கால புத்தாக்கப் பாரம்பரியம் மற்றும் வீட்டுப் பொழுதுபோக்கின் எதிர்காலத்தை நோக்கிய தொலைநோக்குப் பார்வையுடன், இலங்கை மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளருக்கு உலகத்தரம் வாய்ந்த காட்சி அனுபவங்களை வழங்குவதில் Samsung நிறுவனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .