2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்துக்கு ரூ. 23 பில்.

Gavitha   / 2017 பெப்ரவரி 02 , பி.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பதற்கு 23 பில்லியன் ரூபாயை இரண்டு அரசாங்க வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானத்துள்ளது.  

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடாக அமைந்துள்ளதாக கருதும் இலங்கை அரசாங்கம், உத்தேசிக்கப்பட்டுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப்பணிகளின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்த நிதித்தொகையைப் பெற்றுக்கொள்ளவுள்ளது.  

இதன் பிரகாரம், 23.2 பில்லியன் ரூபாயை தேசிய சேமிப்பு வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றிடமிருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு இந்த நிதித்தொகை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மீரிகம முதல் குருநாகல் வரை இந்த அதிவேக நெடுஞ்சாலை 2ஆம் கட்ட பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் தூரம் 39.29 கிலோமீற்றர்களாக அமைந்துள்ளது. அம்பேபுஸ்ஸ பகுதிக்கும் இணைப்பு வழங்கப்படவுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X