Janu / 2026 மார்ச் 09 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பன்முகத்தன்மை கொண்ட நிறுவனங்களின் குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் (Sunshine Holdings), தனது முழு குழுமத்திற்குமான புதிய மனிதவள முகாமைத்துவ அமைப்பை (HRIS) அறிமுகப்படுத்தியுள்ளது. இது, குழுமத்தின் விரிவான டிஜிட்டல் மாற்றம் மற்றும் நவீன நிர்வாக முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
இந்த புதிய அமைப்பு அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வொன்றில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், சிரேஷ்ட தலைமைத்துவக் குழுக்கள், திட்டக்குழுக்கள், சன்ஷைன் உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த அமைப்பினை ஏற்கனவே சுகாதார மற்றும் நுகர்வோர் துறைகளைச் சேர்ந்த 1,700-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அடுத்தடுத்த கட்டங்களில் இது ஏனைய வணிகப் பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
சன்ஷைன் ஹோல்டிங்ஸின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் விரிவான செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த புதிய அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனமானது, தனது பணியாளர்களைத் திறமையான முறையில் நிர்வகிக்கவும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவும், முழு குழுமத்திலும் வலுவான தீர்மானங்களை எடுக்கவும் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் அடித்தளத்தை உருவாக்கியுள்ளது.
குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்:
"சன்ஷைனின் எதிர்கால வளர்ச்சியானது, தனது உறுப்பினர்களை எவ்வளவு சிறப்பாக நிர்வகித்து மேம்படுத்துகிறது என்பதிலேயே தங்கியுள்ளது. இந்த புதிய அமைப்பு ஒரு முக்கியமான நீண்டகால முதலீடாகும். உறுப்பினர்கள் மற்றும் நிறுவனம் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் வளர்ச்சியடைந்து, தெளிவான மற்றும் செயல்திறன் மிக்க ஒரு நிறுவனத்தைக் கட்டியெழுப்ப இது கைகொடுக்கிறது. எமது உறுப்பினர்கள் தங்கள் பணிகளை குழுமத்தின் இலக்குகளுடன் இணைக்கும்போது, முழு குழுமத்தின் எதிர்காலத்தையும் நாம் வலுப்படுத்துகிறோம்" எனத் தெரிவித்தார்.
நிறுவனத்தின் பரிணாமப் பயணத்தின் ஒரு பகுதியாக, சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கடுமையான தேர்வு நடைமுறைக்குப் பின்னர், Oracle Human Capital Management (HCM) நிறுவனத்தின் பாதுகாப்பான Cloud தீர்வைத் தெரிவு செய்துள்ளது. இது, குழுமம் முழுவதும் பணியாளர்களை நிர்வகிப்பதற்கும், பணியாளர் தரவு பகுப்பாய்வு மற்றும் சிறந்த நிறுவனத் திட்டமிடலுக்கும் வழிவகுக்கும்.
குழுமத்தின் தலைமைப் பணியாளர் மற்றும் நிறுவனத் தகவல் தொடர்பு அதிகாரி மிஷேல் சேனாநாயக்க குறிப்பிடுகையில்:
"நிறுவனம் விஸ்தரிக்கப்பட்டு சிக்கலானதாக மாறும்போது, அதன் உள் அமைப்புகளும் மேம்படுத்தப்பட வேண்டும். இந்த புதிய அமைப்பு, நமது பணியாளர்களை ஆதரிக்கும் கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, சிறந்த இணைப்பையும் ஏற்படுத்துகிறது. இது குழுமத்தின் எதிர்காலத் திட்டங்களுக்கு ஏற்ப ஒரு நிலையான பணியாளர் முகாமைத்துவ அனுபவத்தை வழங்குகிறது" என்றார்.
குழுமத்தின் மனித வளம், டிஜிட்டல் மற்றும் வணிகக் குழுக்கள் உட்படப் பல தரப்பினரின் நெருங்கிய ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் குறித்த அமைப்பானது உலகளாவிய சிறந்த நடைமுறைகள், உள்ளூர் செயல்பாட்டுத் தேவைகள் மற்றும் நிறுவன கலாச்சாரத்திற்கு ஏற்ப அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைமை டிஜிட்டல் அதிகாரி இன்ஃபியாஸ் அலி கூறுகையில்:
"நிலையான மாற்றம் என்பது தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே, நாம் பணியாற்றும் முறையை மேம்படுத்துவதில் இருந்து ஆரம்பிக்கிறது. ஒரு வலுவான டிஜிட்டல் அடித்தளத்தை உருவாக்க அனைத்துக் குழுக்களும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளன. இது எமது உறுப்பினர்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதோடு, எதிர்கால மாற்றங்களுக்கும் உதவும்" எனத் தெரிவித்தார்.
இந்த புதிய அமைப்பு, நிறுவனத்தின் பணிகளைச் சிறப்பாக நிர்வகிப்பதற்கும், செயல்திறனை அதிகரிப்பதற்கும், உறுப்பினர்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மற்றும் ‘மக்களை மையமாகக் கொண்ட’ நிறுவனமாக மாறுவதற்கான சன்ஷைன் ஹோல்டிங்ஸின் நீண்டகால இலக்கை இத்திட்டம் பிரதிபலிக்கிறது.

7 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
09 Mar 2026