Editorial / 2026 மே 15 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

Prime Melwa Port City (Pvt) Ltd மற்றும் CHEC Port City Colombo ஆகியவற்றுக்கிடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்து.
Prime Melwa Port City (Pvt) Ltd, கொழும்பு துறைமுக நகரத்தில் (Port City) அமையவுள்ள மிகவும் கௌரவமிக்க 'மரீனா' மற்றும் நீர்ப்பரப்பு அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றை நனவாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, CHEC Port City Colombo (Pvt) Limited உடன் விற்பனை மற்றும் கொள்வனவு ஒப்பந்தத்தில் (SPA) அண்மையில் கையெழுத்திட்டது.
கொழும்பு துறைமுக நகரத்தில் அமையப்பெறவுள்ள ஒரே ஒரு 'மரீனா' மற்றும் நீர்ப்பரப்பு குடியிருப்பு அபிவிருத்தித் திட்டமாக இது திகழ்வதுடன், இப்பிராந்தியத்தில் இதற்கு முன்னர் கண்டிராத ஒரு வியத்தகு வாழ்க்கைமுறை அனுபவத்தை வழங்கவும் இத்திட்டம் தயாராக உள்ளது. புகழ்பெற்ற மரீனா மற்றும் இந்தியப் பெருங்கடலை நோக்கியவாறு அமையவுள்ள இந்த அபிவிருத்தித் திட்டம், அதன் தனித்துவமான வடிவமைப்பு, மனதைக் கவரும் காட்சிகள், உலகத்தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் ஈடுஇணையற்ற பிரத்தியேகத் தன்மை ஆகியவற்றின் ஊடாகத் தெற்காசியாவின் ஆடம்பர நீர்ப்பரப்பு வாழ்க்கைமுறையை மீள்வரையறை செய்யும் ஓர் ஒப்பற்ற கட்டடக்கலை படைப்பாக (Architectural Masterpiece) வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் பாரிய மற்றும் சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நகர்ப்புற மாற்றத்திற்கான முயற்சிகளில் ஒன்றாக அமையப்பெற்றுள்ள இத்திட்டமானது, கொழும்பின் பரிணாமமடைந்து வரும் வானளாவிய கட்டடக்கலையில் ஓர் அடையாளச் சின்னமாகத் திகழவுள்ளது. அத்துடன், சர்வதேச ரீதியில் போட்டியிடக்கூடிய ஓர் ஆடம்பர ரியல் எஸ்டேட் இலக்காக இலங்கை உருவெடுத்துள்ளமையின் அடையாளமாகவும் இது அமையவுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கைகோர்ப்பு, இலங்கையின் மிகவும் செல்வாக்குமிக்க இரு பிரதான நிறுவனங்களான Prime Group மற்றும் Melwa ஆகியவற்றை ஒன்றிணைக்கின்றது. பல தசாப்தகால சந்தை தலைமைத்துவம், மூலோபாயத் தொலைநோக்குப்பார்வை மற்றும் நிரூபிக்கப்பட்ட சிறப்பாற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் ஊடாக, உலகத்தரம் வாய்ந்த ஒரு 'மரீனா பிரண்ட்' (Marina-front) இலக்கை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
சாதாரண உயர்தர ரியல் எஸ்டேட் முயற்சி என்பதற்கு அப்பால், இத்திட்டம் இலங்கையின் எதிர்காலம் குறித்தும், வளர்ந்து வரும் சர்வதேச வர்த்தக, வாழ்க்கைமுறை மற்றும் முதலீட்டு மையமாக கொழும்பு துறைமுக நகரம் பெற்றுவரும் முக்கியத்துவம் குறித்தும் வெளிப்படுத்தப்படும் ஒரு திடமான நம்பிக்கையாகும். மேலும், நீண்டகால பொருளாதார விழுமியங்களை உருவாக்குவதுடன், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கக்கூடிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பலப்படுத்தக்கூடிய பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு, இலங்கையின் முன்னணி நிறுவனங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் இது வெளிப்படுத்துகின்றது.
கொழும்பு துறைமுக நகரத்தில் எஞ்சியுள்ள இறுதி 'மரீனா பிரண்ட்' அபிவிருத்தி வாய்ப்புகளில் ஒன்றாக விளங்கும் இந்த நிலப்பரப்பு, சிறப்பான மூலோபாய முக்கியத்துவத்தையும் நீண்டகால முதலீட்டு மதிப்பையும் கொண்டுள்ளது. இலங்கையின் முதலாவது வெளிநாட்டு நாணயங்கள் பெயரிடப்பட்ட விசேட பொருளாதார வலயத்தினுள் (SEZ) அமையப்பெற்றுள்ள இத்திட்டம்; சர்வதேச முதலீட்டாளர்கள், புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் மற்றும் உயர் வருமானம் ஈட்டும் கொள்வனவாளர்களை வெகுவாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், ஆசியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய வளர்ந்து வரும் இடங்களில் ஒன்றாக, உலகத்தரம் வாய்ந்த நீர்ப்பரப்பு வாழ்க்கைமுறையையும் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பையும் தேடுபவர்களுக்கு இதுவொரு சிறந்த தெரிவாக அமையும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கைகோர்ப்பின் மூலம், Prime Lands மற்றும் Melwa ஆகிய நிறுவனங்கள் மற்றுமொரு ஆடம்பரத் திட்டத்தை வெறும் கட்டடமாக மட்டும் உருவாக்காமல், இலங்கையின் இலட்சியம், புத்தாக்கம் மற்றும் சர்வதேச அரங்கில் நாட்டின் துரிதமான முன்னேற்றம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில், சர்வதேச ரீதியாகப் புகழ்பெற்ற ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகின்றன.
30 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago