2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மாத்தறையில் ‘ஃபெஷன் பக்’இன் ஆசிரியர்களுக்கான பயிற்சி

Editorial   / 2018 ஜூன் 07 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஃபெஷன் பக், பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தைப் பிரகாசம் மிக்கதாகக் கட்டியெழுப்புவதற்காக ஆசிரியர்கள் தமது அறிவை மேம்படுத்திக் கொள்ள உதவுகின்ற ஆசிரியர் பயிற்சி நிகழ்வொன்றை அண்மையில் மாத்தறையில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தது.   

சிறுவர்களுக்கான பயிற்சி முறைகளை அறிந்து கொள்ளல், காத்திரமான மாணவர்-ஆசிரியர் உறவுமுறையொன்றைக் கட்டியெழுப்புதல், உள வள ஆலோசனை, பணி-வாழ்வுச் சமநிலை மற்றும் ஆசிரியர்கள் ஆற்றும் வகிபாகத்தின் முக்கியத்துவம் தொடர்பில் ஆசிரியர்கள் கற்றுக்கொள்வதற்கு உதவும் நோக்கத்துடன் பேராசிரியர் சரத் விஜேசூரிய இந்நிகழ்வை நடாத்தியிருந்தார்.   

மாத்தறை, மஹமாய பெண்கள் பாடசாலையில் நடாத்தப்பட்ட பயிற்சி நிகழ்வில், மாத்தறை கல்வி வலயத்திலுள்ள 101 பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியவாறு, 250 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்.   

“அடுத்த தலைமுறையானது தொழில்நுட்பத்தின் மூலமாகத் தொடர்ந்தும் முன்னேற்றம் கண்டு வருகின்ற நிலையில், ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சியை வழங்க வேண்டியதன் முக்கியத்துவமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆகவே எமது ஆசிரியர்களுக்கு முக்கிய காரணிகளில் சிறந்த பயிற்சியை வழங்குவது மிகவும் அவசியமாகும். இது அவர்கள் தமது திறன்களை வளர்த்துக்கொள்ள உதவுவதுடன், அது பிற்காலத்தில் அவர்களது அனுபவத்துடன் சேர்ந்து  கூடுதல் மதிப்பாக அமையும். தரமான கல்வி வழங்கப்படுவதற்கு, தரமான ஆசிரியர்களை விருத்தி செய்வது மிக முக்கியமானதாக உள்ளதுடன், பொறுப்புள்ள ஒரு வர்த்தக நிறுவனம் என்ற வகையில் எமது நம்பிக்கையும் அதுவே. மாத்தறையிலுள்ள ஆசிரியர்களுக்கு காலத்தின் தேவையாக அமைந்த இப்பயிற்சி நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு, வாய்ப்பை வழங்கியமைக்காக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்” என்று ஃபெஷன் பக் நிறுவனத்தின் பணிப்பாளரான ஷபீர் சுபியான் குறிப்பிட்டார்.   

ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாது, மாணவர்களுக்கும் உதவுகின்ற பல்வேறு செயற்திட்டங்களை ஃபெஷன் பக் முன்னெடுத்து வருவதுடன், மாணவர்கள் தமது தொழிலைத் தெரிவு செய்யும் பயணத்துக்கு வழிகாட்டி, அவர்களுக்கு உதவி, உற்சாகப்படுத்துவதற்கு அடிப்படை பயிற்சியை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ள SisuDiriMaga என்ற செயற்திட்டத்தையும் பொறுப்புள்ள, நவநாகரிக சில்லறை வர்த்தக நிறுவனம் என்ற வகையில் அது வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .