2025 மே 02, வெள்ளிக்கிழமை

மாத்தளையில் SLT-MOBITEL இன் ESG செயற்பாடுகள்

Freelancer   / 2023 டிசெம்பர் 22 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) செயற்பாடுகளில் நேர்த்தியான மாற்றம் மற்றும் விரிவாக்கங்களை மேற்கொள்ளும் வகையில், மாத்தளையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.

மாத்தளை கைக்காவல மத்திய கல்லூரியில் ESG நிகழ்ச்சித் திட்டத்தை SLT-MOBITEL முன்னெடுத்திருந்ததுடன், நான்கு தாக்கங்கள் நிறைந்த ESG செயற்திட்டங்களை உள்வாங்கி அர்த்தமுள்ள செயற்பாட்டில் ஈடுபட்டது.  STEMUP மையத்துடன் கைகோர்த்து, STEM கல்வியினூடாக மாணவர் தொழில்முயற்சியாண்மைக்கு வலுவூட்டுவது, ‘Hour of Code’பயிற்சிப்பட்டறைகளை முன்னெடுப்பது, ‘Sithak Athnam Pothak Denna’ (மனமிருந்தால் புத்தகமொன்றை வழங்குங்கள்) புத்தக நன்கொடை நிகழ்ச்சித் திட்டம் மற்றும் மர நடுகை திட்டத்தினூடாக சூழல் நிலைபேறாண்மையை ஊக்குவித்தல் ஆகியன இந்த செயற்பாடுகளில் அடங்கியிருந்தன.

இந்தப் பிரதேசத்திலுள்ள மற்றுமொரு பாடசாலைக்கு உதவும் வகையில், SLT-MOBITEL அணியினர், மாத்தளை, இரத்தோட்டையின் அலகோலமட கனிஷ்ட பாடசாலைக்கு விஜயம் செய்திருந்தனர். அதிகளவு தேவைகளைக் கொண்ட பின்தங்கிய பிரதேசமாக அமைந்திருப்பதுடன், சந்தைப்படுத்தல் சேவைகள் பிரிவைச் சேர்ந்த அங்கத்தவர்களால், பாடசாலையில் செயலிழந்திருந்த மூன்று கணனிகள் திருத்தி வழங்கப்பட்டது. மேலும், பாடசாலை பைகள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் போன்றன மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதுடன், பாடசாலை நூலகத்துக்கு பெறுமதி வாய்ந்த புத்தகத் தொகுதியும் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது. பாடசாலை வளாகத்தில் மரநடுகைத் திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வுகளில், SLT பிரதி பொது முகாமையாளர் பொது உறவுகள் நிலந்தி ஜயகொடி, மாத்தளை பிராந்திய ரெலிகொம் அலுவலக முகாமையாளர் சத்துரிகா பிந்துசார, மொபிடெல் பிராந்திய செயற்பாடுகள் பிரதி பொது முகாமையாளர் ரொமேஷ் ஜோன், மொபிடெல் மாவட்ட முகாமையாளர் ஜகத் புஞ்சிஹேவா மற்றும் இதர SLT-MOBITEL பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கியிருந்தனர்.  பாடசாலையின் அதிபர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரும் இந்த செயற்பாடுகளில் பங்கேற்றிருந்தனர்.

இந்த ஒன்றிணைந்த முயற்சிகளினூடாக ESG பெறுமதிகளின் மீதான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், நிறுவனம் இயங்கும் சமூகங்களில் கல்வி, தொழில்நுட்பம், கல்வியறிவு மற்றும் சூழல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் நேர்த்தியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .