Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 09 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019ஆம் ஆண்டுக்கான வேகப் பரிசோதனை விருதின் (Speedtest Award™ 2019) வெற்றியாளராக, மொபிடெலை, Ookla அறிவித்துள்ளது. இதன் மூலம், இலங்கையில் மிக வேகமான மொபைல் வலையமைப்பை மொபிடெல் கொண்டுள்ளது. இதற்காக, தொடர்ச்சியாக நான்கு காலாண்டுகளாக இவ்விருதை, மொபிடெல் வெற்றிகரமாக வென்றுவருவதாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: Speedtest விருதுகள் உலகெங்கிலும் உள்ள, உரிமம் பெற்ற இணைய சேவை வழங்குநர்கள், மொபைல் இணைப்புச் சேவை வழங்குநர்களுக்கு இடையில் Ookla வால், தங்கள் சந்தைகளில் மிக வேகமான சேவையை வழங்குபவர்கள் என்ற வகையில் இந்த விருது தீர்மானிக்கப்படுகின்றது. இலங்கைக்கான விருது, வேக மதிப்பெண்ணைப் (Speed Score ™) பயன்படுத்தித் தீர்மானிக்கப்பட்டது. இது, வலையமைப்பின் வேக செயற்றிறனைத் தரவரிசைப்படுத்தி, ஒவ்வொரு சேவை வழங்குநர்களினதும் பதிவிறக்கம், பதிவேற்றம் ஆகியவற்றின் வேக அளவுகளையும் உள்ளடக்கியுள்ளது. ஏனைய போட்டியாளர்களை விட, மொபிடெலின் வேக மதிப்பெண் உச்சநிலையில் காணப்பட்டதோடு, மற்றவர்களை விஞ்சி, 2019ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மிக வேகமான மொபைல் வலையமைப்பாக மீண்டும் மகுடம் சூட்டிக்கொண்டது. இந்த Speedtest® க்கு பின்னாலிருக்கும் Ookla, புகழ் பெற்ற சுயாதீனமான இணைய பரிசோதனைத் தளமாகும். இதை, உலகம் முழுவதும் உள்ள பல மில்லியன் கணக்கான நுகர்வோர், ஒவ்வொரு நாளும் பயன்படுத்துகின்றனர்.
4G LTE இனை மேம்படுத்துவதில், மொபிடெலுக்கு இருக்கும் தொடர்ச்சியான ஈடுபாட்டின் மூலம், உன்னதமான பாவனையாளர் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது. இது high definition வீடியோ ஸ்டிரீமிங், Multimedia Online Gaming (MMOG) ஆகியவற்றை அனுபவித்து, மகிழ்ந்திட உதவுகிறது. மொபிடெல், ஏற்கெனவே, 2019ஆம் ஆண்டில் ப்ரோட்பாண்ட விரிவாக்கத்துக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. மேலும், 5G இன் வணிக ரீதியான செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நேரத்தில், அதற்காகத் தயார் நிலையில் இருக்கவும் 2020ஆம் ஆண்டுக்கான கூடுதல் முதலீடுகளை மேலும் விரிவுபடுத்தவும் ஆரம்பித்துள்ளது.
தெற்காசியப் பிராந்தியத்தில், முதலாவது மொபைல் 5G வலையமைப்புச் சேவையை, பரிசோதனை செய்த மொபைல் சேவை வழங்குநர்கள் மொபிடெல் என்பதும் குறிப்பிடத்தக்கது. வணிக 5G திறன்பேசியைத் தெற்காசியப் பிராந்தியத்தில் 2019 ஜுன் நான்காம் திகதி முதன்முறையாகப் பயன்படுத்தி இருந்ததனூடாக மொபிடெல், தனது வேக ஆற்றலை மேலும் உறுதி செய்திருந்தது.
அத்துடன், தெற்காசியாவில் 1.55Gbps எனும் புதிய வேக சாதனையையும் புரிந்துள்ளது. இது உலகளாவிய ரீதியில், 5G சேவையை நிறுவுவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல்லாகவும் அமைந்துள்ளது என, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
34 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago