2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மைலோ வழங்கும் 1,000 சைக்கிள்கள்

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர்களும் அவர்களது குடும்பத்தினரும் உடற்பயிற்சி நிறைந்த வாழ்வை முன்னெடுக்க உதவுவதற்காக, 1,000 அதிர்ஷ்டசாலிச் சிறுவர்கள், “மைலோ”வின் அனுசரணையில், புத்தம்புதிய மவுண்டன் சைக்கிள்களை வென்றெடுக்கக்கூடிய வாய்ப்பை வழங்க, மைலோ முன்வந்துள்ளது.   

இந்தப் போட்டி, 2018 நவம்பர் 30 வரை இடம்பெறவுள்ளதுடன், 2 வாரங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் அதிர்ஷ்டச் சீட்டிழுப்பின் மூலமாக, வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்படுவர். அதிர்ஷ்டசாலிகள், மாபெரும் சைக்கிள் பவனியில் தமது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, கொழும்பு வீதிகளில் உலா வரும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.  

“மைலோ வர்த்தக நாமமானது, ‘வெற்றிக்கான உந்து சக்தியளிப்பதில் எப்போதும் முன்னின்று செயற்பட்டு வந்துள்ளதுடன், சிறுவர்கள் உடற்பயிற்சி நிறைந்த வாழ்க்கை முறையை முன்னெடுப்பதற்கு, அவர்களை ஊக்குவித்து வருகின்றது. இம்முறை, தொடர்ந்து 4ஆவது ஆண்டாகவும், மவுண்டன் சைக்கிள்களை பரிசாக வழங்குவதுடன், முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை சாதனை படைக்கும் எண்ணிகையில் போட்டிக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறுமென எதிர்பார்த்துள்ளோம். இப்பிரசாரமானது, மக்கள் மத்தியில் மிகுந்த பிரபலமடைந்து வருவது, இவ்வர்த்தக நாமத்தின் மீது அவர்கள் வைத்துள்ள வலுவான நம்பிக்கைக்கு சான்று பகருகின்றது” என, உற்பத்திப் பிரிவின் சந்தைப்படுத்தல் முகாமையாளரான மொஹமட் அலி கூறினார்.  

இவ்வாண்டுப் பரிசாக வழங்கப்படவுள்ள சைக்கிள்களின் மொத்த எண்ணிக்கை, 4,000ஆக அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .