Editorial / 2019 நவம்பர் 06 , பி.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொபிடெல், தமது வாடிக்கை யாளர்களுக்கு ஆபத்தான நோய்களுக்காக கட்டுப்படியான, பாதுகாப்பான, சிக்கலற்ற காப்பீட்டினை வழங்கிட ஜனசக்தி லைஃப் உடன் இணைந்துள்ளது.
மாரடைப்பு, புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதய சத்திரசிகிச்சை போன்ற 25 விதமான ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
மொபிடெல் அதன் பரந்த வாடிக்கையாளர் தளத்தின் சுகாதார தாக்கங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் மன அமைதியைக் கொடுப்பதற்காக ஜனசக்தி லைஃப் உடன் இணைந்து இந்த பெக்கேஜினை பிரத்தியேகமாகச் செய்துள்ளது.

இது தமது வாடிக்கையாளர்களை மதிப்பதில் அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பிப்பை வெளிக்காட்டுகின்றது. மொபிடெல் தொழில்நுட்பத்தின் அனுகூலங்களை அன்றாட வாழ்க்கையில் கொண்டுவருகிறது. ஆயுள் காப்பீட்டின் பாரம்பரிய நோக்கத்தை மாறி வரும் வாழ்க்கை முறைத் தேவைகளுக்கு ஏற்ப தங்கள் ஸ்மார்ட் போனின் மூலம் ஆயுள் காப்பீட்டை வாங்க வாடிக்கையாளர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட இந்த காப்பீட்டுத் திட்டமானது மொபிடெல் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு நாளாந்தம் குறைந்த கட்டணமாக ரூ. 8 ஐ செலுத்தி உச்ச காப்பீட்டுத் தொகையாக ரூ. 800,000 இனை ஆபத்தான நோய்களுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு நாளாந்தம் காப்பீட்டுத் தொகை குறைந்து கொண்டு வருவதுடன் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு மாதக்கட்டண பட்டியலில் மாதாந்த காப்பீட்டுத் தொகை சேர்க்கப்பட்டு வரும். முழுமையான காப்பீட்டுத் தொகையை செலுத்துவதன் மூலம் காப்பீட்டுதாரருக்கு முழுமையான அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
கொடுப்பனவு செலுத்த முடியாமல் போகும் பட்சத்தில் காப்பீடானது அற்றைவரை செலுத்தப்பட்டுள்ள தொகைக்கமைய சரிசம வீதத்தின் அடிப்படையில் வரையறுக்கப்படும்.
19 minute ago
34 minute ago
38 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
34 minute ago
38 minute ago
48 minute ago