Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 நவம்பர் 04 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு சேவையாற்றி வரும் இலங்கையின் ஒரேயொரு தனியார் துறை சம்மேளனமான தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்ற 23ஆவது வருடாந்த தேசிய சம்மேளன ஏற்றுமதியாளர்கள் விருதுகள் (NCE) வழங்கும் நிகழ்வில் ஜனசக்தி காப்புறுதி நிறுவனமானது தேசத்தின் தலைசிறந்த ஏற்றுமதியாளர்களை கௌரவிக்கும் பொருட்டு தமது ஆதரவினை வழங்கியிருந்தது. இலங்கையின் வருடாந்த வர்த்தக நாட்காட்டியின் மிக முக்கியமான இந்த விருதுகள் நிகழ்வில் ஏற்றுமதி சமூகத்தைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்குபற்றியிருந்தன.
இலங்கை ஏற்றுமதியாளர்களின் முக்கிய குரலாக திகழும் தேசிய வர்த்தக சம்மேளனத்துடனான தொடர்ச்சியான பங்காண்மையும், நாட்டின் மிகவும் பெருமைக்குரிய ஏற்றுமதியாளர்கள் விருதுகள் வழங்கும் நிகழ்வின் ஓர் அங்கமாக இருப்பதையிட்டும் ஜனசக்தி பொதுக்காப்புறுதி நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது' என ஜனசக்தி பொதுக்காப்புறுதி லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் பெர்னாண்டோ தெரிவித்தார்.
'சர்வதேச வர்த்தகத்தின் வேகத்தை அதிகரித்தல் மற்றும் வர்த்தக தாராளமயமாக்கம் மற்றும் சுதந்திர வர்த்தகத்தை தழுவி உலகளாவிய ரீதியில் முயற்சிகளை மேம்படுத்தல் மூலமாக இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு நீண்டகாலம் நிலைத்திருப்பதற்கான அனுகூலங்களை பெற்றுக்கொடுக்க முடியும். சர்வதேச சந்தைகள் எளிதில் மாறக்கூடியது. இருப்பினும் ஜனசக்தி நிறுவனமாகிய நாம், எமது ஏற்றுமதியாளர்கள் தங்கள் வர்த்தகத்தை சர்வதேச சந்தைகள் நோக்கி விஸ்தரிக்க மற்றும் நகர்த்த முற்படும் போது அவர்கள் முகங்கொடுக்கக்கூடிய இடர்கள் மற்றும் சவால்கள் குறித்து கவனம் செலுத்தி வருகிறோம். எமது ஏற்றுமதியாளர்களுக்கு தமது உற்பத்திகள் மற்றும் சேவைகளை சர்வதேச வர்த்தக நாமங்களாக உருவாக்கவும், மூலோபாய ரீதியில் சிந்திப்பதற்கும் மன அமைதி அவசியம் என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளோம். உலகளாவிய வர்த்தக குறியீட்டு ஜாம்பவான்களாக வருவதற்கான இடர்களை அவர்கள் கணக்கிடும் தருவாயில், இலங்கையின் முன்னணி காப்புறுதி வழங்குனர்களுள் ஒன்றான நாம் அவர்களுக்குத் தேவையான மன அமைதியை அளித்து வருகிறோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.
'கடந்த 23 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வானது தேசிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. இலங்கை போன்ற நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் ஏற்றுமதியாளர்கள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றனர். எனவே ஏற்றுமதி நோக்கிய மூலோபாயங்களின் அபிவிருத்திகளுக்காக புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு சம்மேளனம் தயார் நிலையில் உள்ளது' என இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் தேசிய சம்மேளனத்தின் தலைவி சாரதா டி சில்வா தெரிவித்தார்.
இலங்கையின் முன்னணி பொதுக்காப்புறுதி வழங்குனர்களுள் ஒன்றான ஜனசக்தி பொதுக் காப்புறுதி லிமிடெட் நிறுவனமானது மூலப்பொருட்கள் களஞ்சியசாலைக்கு வந்தது முதல் முடிவுப்பொருள் வாங்குனர்களின் களஞ்சியசாலைக்கு செல்லும் வரையிலான பாதுகாப்பினை உறுதி செய்யக்கூடிய விரிவான காப்புறுதி திட்டங்களை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதில் நில போக்குவரத்து, களஞ்சியம் மற்றும் மூலப்பொருள் இறக்குமதி போன்றன உள்ளடங்கியுள்ளன. இந்த காப்பீட்டு திட்டம் வருடாந்த அடிப்படையில் உள்ளதுடன், ஏற்றுமதியாளர்களின் சொத்துக்களின் பாதுகாப்பு வரை நீடித்துக்கொள்ள முடியும். இலங்கையில் முன்னணி பொதுக்காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாகவும், தனித்தன்மை மிக்க நஷ்டஈட்டு கொடுப்பனவில் 22 வருட வரலாற்றினை ஜனசக்தி கொண்டுள்ளது. தெளிந்த அறிவு மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச கடலாண்மைச் சட்டம் மற்றும் சுங்கம்; தொடர்பான புரிதலை கொண்டுள்ள ஜனசக்தி, வாடிக்கையாளர்களின் காப்புறுதி தேவைகளை செயற்திறன் மிக்க முறையில் தீர்த்து வைப்பதற்கான வலிமை மற்றும் நிபுணத்துவத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.
14 minute ago
55 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
55 minute ago
1 hours ago
4 hours ago