2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மாணவர் சேர்ப்பை முன்னெடுக்கும் SLIIT

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தகவல் தொழில்நுட்பம், கணினி, வர்த்தகம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்புகளை வழங்கும் கல்வியகமான SLIIT, 2015/ 2016 கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு கற்கைக்காக புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளவுள்ளது. இந்த கற்கையை தொடர விரும்பும் மாணவர்கள் தமது பெற்றோருடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி காலை 9 மணிக்கு மாலபே மற்றும் கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள SLIIT பிரதான பல்கலைக்கழகங்கள் மற்றும் மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் ஆகிய இடங்களிலுள்ள SLIIT நிலையங்களுக்கு விஜயம் செய்யவும். SLIIT உடன் கைகோர்த்துள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளை சந்திக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி மாலபே கம்பஸுக்கு வருகை தந்து தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடனான SLIIT தொடர்புகள் மூலம் தமது கற்கையினை மாணவர்கள் SLIIT கல்வியகத்திலோ அல்லது 2 வருடங்களின் பின்னர் பிறிதொரு பல்கலைக்கழகத்திலோ பூர்த்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

SLIIT இன் நான்கு வருட தகவல் தொழில்நுட்பத்தில் BSc (Hons) கற்கையானது தகவல் தொழில்நுட்பம், கணினி சிஸ்டம் மற்றும் நெட்வொர்கிங், மென்பொருள் பொறியியல், Interactive ஊடகம், தகவல் முறைமைகள் மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற ஆறு துறைகளில் வழங்கப்படவுள்ளன.  

க.பொ.த உயர்தர பரீட்சையில்(இலங்கை/ இலண்டன்;) அல்லது ஏதேனும் பாடநெறியில் ஒரே அமர்வில் 3 பாடங்களில் சித்தி அல்லது SLIIT இனால் நடத்தப்படும் திறனய்வு தேர்வில் சித்தியடைந்தோர் IT பட்டதாரி கற்கைகளை தொடர முடியும். இதற்கு மேலதிகமாக, கணினி சிஸ்டம் மற்றும் நெட்வொர்கிங் பட்டதாரி கற்கையை தொடர விரும்பும் மாணவர்கள் கணிதம் அல்லது உயிரியல் பாடத்தில் சித்தியடைத்திருத்தல் வேண்டும். மேலும் அவுஸ்திரேலியாவின் கர்டன் பல்கலைக்கழகம் அல்லது UK ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தின் IT பட்டதாரி கற்கையை இலங்கையிலிருந்தவாறே மாணவர்கள் கற்க முடியும்.

SLIIT இன் முதலாண்டு IT மாணவியும், 2009 இலங்கை பள்ளி வர்ணங்கள் விருதுகள் விழாவில் கேரம் விளையாட்டில் பங்குபற்றியவருமான புத்தினி டயஸ் கருத்து தெரிவிக்கையில், 'ஒவ்வொரு போட்டிகளிலும் நான் பங்கேற்று வெளிப்படுத்திய திறமைகள் மற்றும் எனது குழு உறுப்பினர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உருவாக்கித்தந்த சூழல் போன்றன என்னை கேரம் விளையாட்டில் சிறந்து விளங்க உதவியது' என்றார்.

பொறியியல் துறையில் மிளிர விரும்பும் மாணவர்கள்  சிவில், மெக்கானிக்கல், Mechatronics, Material, இலத்திரனியல் மற்றும் இலட்ரோனிக் என்ஜினியரிங் போன்ற துறைகளில் நான்கு வருடகால BSc. Engineering (Hons) பட்டதாரி கற்கையை தொடர முடியும்.

பிரதான அனுமதிப்புக்கான விண்ணப்பங்கள் செப்டம்;பர் மாதம் 24ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப படிவங்களை SLIIT நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக விபரங்களை 2301904/ 2413900 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது www.sliit.lk எனும் இணையத்தளம் ஊடாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X