Gavitha / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வழக்கமான வாடிக்கையாளர்களைப் பொறுத்தமட்டில் இரும்புப்பொருட்கள் (ஹாட்வெயார்) மற்றும் கருவிகளைத் தேடிக் கொள்வனவு செய்வது என்பது, அதிக நேரத்தை எடுக்கும், பெரும் சுமையான ஒரு காரியமாகக் கருதப்படுகின்றது.
ஹாட்வெயார் பொருட்கள் மற்றும் கருவிகளைக் கொள்வனவு செய்கின்ற இந்த முறையை, மிக விரைவில் 'மாஸ்டர்ஸ் ஹாட்வெயார் சுப்பர்மார்க்கட்' மாற்றியமைக்கவுள்ளது. அதன்மூலம் இச்செயன்முறை மிகவும் இலகுவானதாகவும் சிரமம் அற்றதாகவும் மாறும். அதன்படி, இலங்கையின் முதலாவது ஹாட்வெயார் சுப்பர்மார்க்கட் நிலையமான மாஸ்டர்ஸ் ஹாட்வெயார், அண்மையில் கொஹூவலையில் திறந்து வைக்கப்பட்டது.
ஹாட்வெயார் பொருட்கள், கட்டட நிர்மாணப் பொருட்கள் மற்றும் கருவிகளுக்காகப் பிரத்தியேகமாக நிறுவப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது சுப்பர்மார்க்கட் நிலையமாக மாஸ்டர்ஸ் சுப்பர்மார்க்கட் திகழும். இலங்கையில் உள்ள அனைத்து முன்னணி விநியோகஸ்தர்களின் உற்பத்திகளும் இங்கு கிடைக்கக் கூடியதாக இருக்கும்.
'வாடிக்கையாளர்கள் தமக்குத் தேவையான பொருட்கள் எங்குள்ளது என்றுக் கண்டறிவது எந்தளவுக்கு சிரமமானது என்பதை நாம் அனுபவ ரிதியாக அறிந்து வைத்துள்ளோம். அடிக்கடி ஒரு விற்பனை நிலையத்தில் இருந்து இன்னுமொரு விற்பனை நிலையத்திற்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படுகின்றது. ஏனென்றால், உள்ளூர் ஹாட்வெயார் விற்பனை நிலையங்களில் வரையறுக்கப்பட்ட பொருட் தெரிவுகளேக் காணப்படுகின்றன.
எமது இந்த விற்பனை நிலையமானது அனைத்து விதமான ஹாட்வெயார் சார்ந்த உற்பத்திகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டிருக்கின்றது. எனவே, வாடிக்கையாளர்கள் மிக இலகுவான முறையில் வருகைதந்து, பொருட்களைத் தேடி, கொள்வனவு செய்வதுக்கு இது மிகவும் சௌகரியமானதாக அமைகின்றது' என்று மாஸ்டர்ஸ் ஹோம் இம்புருவ்மன்ட் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் பணிப்பாளர் ஹரேந்திர பெரேரா தெரிவித்தார்.
அதிகளவிலான தெரிவுகளை நாடுகின்ற போதிலும், தத்தமது உள்ளூர் விற்பனை நிலையங்களில் இருந்து அவ்வாறு அதிக தெரிவுகளுடன் ஹாட்வெயார் உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்களை மாஸ்டர்ஸ் ஹாட்வெயார் நிவர்த்தி செய்கின்றது.
நெருக்கடியான கால அட்டவணைகள் மற்றும் நீண்ட வேலை நேரம் என்பவற்றுக்குப் பொருத்தமாகச் செயற்படும் விதத்தில், இந்த சுப்பர்மார்க்கட் விற்பனை நிலையமானது வாரத்தின் ஏழு நாட்களும் காலை 7 மணி தொடக்கம் இரவு 9 வரை திறந்திருக்கும். எனவே, இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் வசதிவாய்ப்பை அளிக்கக் கூடியதாக உள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago