Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 01 , பி.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
2017 நிதியாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 10.1 பில்லியன் ரூபாயை நிகர செலுத்தப்பட்ட தவணைக்கட்டணங்களாகப் பதிவு செய்துள்ளது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தப் பெறுமதி 22 சதவீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், வழமையான புதிய வியாபாரத் தவணைக்கட்டணங்கள் 25 சதவீதத்தால் அதிகரித்திருந்ததுடன், ஆண்டில் துறையில் காணப்பட்ட சிறந்த ஏழு நிறுவனங்கள் மத்தியில், யூனியன் அஷ்யூரன்ஸ் மூன்றாவது மாபெரும் புதிய வியாபார உருவாக்குநராகவும் பதிவாகியிருந்தது.
வரிக்குப் பிந்திய இலாபமாக யூனியன் அஷ்யூரன்ஸ் 7.4 பில்லியன் ரூபாயைப் பதிவு செய்திருந்தது. 2016 இல் இந்தப் பெறுமதி 1.3 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது. வரிக்கு பிந்திய இலாபத்தில், பங்குபற்றாத ஆயுள் நிதிய மேலதிக மாற்றப் பெறுமதியான 3.4 பில்லியன் ரூபாய், இன்சூரன்ஸ் லிமிட்டெடின் பொதுக் காப்புறுதி வியாபாரத்தில் கொண்டிருந்த பங்குகள் மீதான இலாபமாகப் பெறப்பட்ட 188 மில்லியன் ரூபாயும் உள்ளடங்கியிருந்தது.
முதலீட்டு வருமானம் 38 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது, அரசாங்கப் பிணைகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த முதலீடுகள் மீதான வட்டி அதிகரிப்பு மற்றும் பங்கிலாபங்களினூடாகப் பெறப்பட்ட மாறாத வருமதிகள் போன்றன இதில் பங்களிப்புச் செலுத்தியிருந்தன.
தேறிய காப்புறுதி அனுகூலங்கள் மற்றும் நஷ்டஈடுகள் போன்றன 75 சதவீதத்தால் அதிகரித்திருந்தன. இதில் முதிர்வுகள் மற்றும் கைத்துறப்புகளுக்கான கொடுப்பனவுகளில் அதிகரிப்பு பதிவாகியிருந்தமை முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தன.
முதிர்வுக் கொடுப்பனவுகள், யூனியன் அஷ்யூரன்ஸின் ஒப்பந்த கடப்பாடுகளின் பிரகாரம் அமைந்திருந்ததுடன், சவால்கள் நிறைந்த பொருளாதார சூழல் காரணமாக, கைத்துறப்புகள் அதிகரித்திருந்தன. காப்புறுதி வழங்கல் மற்றும் தேறிய கையகப்படுத்தல் செலவீனம் 28 சதவீதத்தால் அதிகரித்து 1.8 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது. இதில் மாறும் கொடுப்பனவுக் கட்டமைப்புகளில் ஏற்பட்ட அதிகரிப்பு, பங்களிப்பு வழங்கியிருந்தன.
இதர தொழிற்பாட்டு, கண்காணிப்பு மற்றும் விற்பனை செலவீனம் ஆகிய 21 சதவீதத்தால் அதிகரித்து, வளர்ச்சியில் பங்களிப்பு வழங்கியிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago