Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2022 செப்டெம்பர் 23 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ், துறையின் முதலாவது blog ஆக்கங்களை பதிவு செய்யும் போட்டியான ‘BLOG IT’ என்பதை 2022 செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் அறிமுகம் செய்துள்ளது. செப்டெம்பர் மாதம் ஆயுள் காப்புறுதி விழிப்புணர்வு மாதமாக அனுஷ்டிக்கப்படும் நிலையில் இந்தப் போட்டியை யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கின்றது. இந்த BLOG IT போட்டியில் ஆர்வமுள்ள அனைவரும் தமது ஆக்கங்களை https://lnkd.in/gxFCcH2R எனும் இணையத்தளத்தினூடாக 2022 செப்டெம்பர் 25ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு கோரப்படுகின்றனர். இந்தப் போட்டியில் வெற்றியாளராக தெரிவு செய்யப்படுவோருக்கு ரூ. 180,000 பெறுமதியான பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படும் என்பதுடன், தமது ஆக்கங்களை யூனியன் அஷ்யூரன்ஸ் இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரசுரமாவதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள்.
மக்களுக்கு தமது கனவுகளை எய்துவதற்கு வலுவூட்டுவதற்கும், ஆரோக்கிய நலனுக்காக காப்புறுதிகளை வழங்குவதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த நோக்கத்தின் நீடிப்பாக BLOG IT அமைந்துள்ளது. கட்டுரை, கவிதை அல்லது சிறுகதை போன்றவற்றினூடாக, “ஆயுள் காப்புறுதியின் முக்கியத்துவம்” என்பதை இலங்கையின் திறமையாளர்கள் வெளிப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் போட்டி அமைந்துள்ளது. சுயாதீன நிபுணர்களினால் மீளாய்வு செய்யப்பட்டு, சமர்பிக்கப்பட்ட ஆக்கங்களின் தரம் மற்றும் புத்தாக்கத்திறன் போன்றவற்றினூடாக வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி மஹேன் குணரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “பொது மக்களுக்கு நிதிப் பாதுகாப்பைப் பெற்றிருப்பதன் முக்கியத்துவம் மற்றும் பரிபூரணமான வாழ்க்கையை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை பொது மக்கள் மத்தியில் உணர்த்தும் வகையில் ஆயுள் காப்புறுதி விழிப்புணர்வு மாதம் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த ஆண்டில், BLOG IT எனும் போட்டியை அறிமுகம் செய்வதையிட்டு யூனியன் அஷ்யூரன்ஸ் பெருமை கொள்கின்றது. எமது திறமையான எழுத்தாளர்களுக்கு தமது சிந்தனைகளை வெளிப்படுத்தி, பகிர்ந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொழிற்துறையில் இது போன்று முன்னெடுக்கப்படும் முதலாவது போட்டியாகவும் BLOG IT அமைந்துள்ளது. எழுத்துத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பை வழங்குவதில் நாம் தலைமைத்துவமேற்று செயலாற்றுகின்றதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அனைத்து பங்குபற்றுநர்களுக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், பங்குபற்றுகின்றமைக்காக நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டெழும் வகையில் பணியாற்றுவதுடன், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை நிதித் தளம்பல் நிலைகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் சமூகங்கள் மத்தியில் நிதியியல் அறிவை மேம்படுத்துவதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை அர்ப்பணித்துள்ளது. ஆயுள் காப்புறுதி விழிப்புணர்வு மாதத்தில் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக BLOG IT மற்றும் பல இதர செயற்பாடுகளை முன்னெடுக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
3 minute ago
42 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
42 minute ago
47 minute ago