2025 மே 21, புதன்கிழமை

யூனியன் மனிதாபிமானம் தொடர்ந்து ஊக்குவிப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

‘யூனியன் மனிதாபிமானம் - அறிவார்ந்த, ஆரோக்கியமான, வளமான எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளில் யூனியன் அஷ்யூரன்ஸின் சமூக பொறுப்புணர்வு வர்த்தக நாமம் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சிகரமான சமூகங்களை நாடு முழுவதிலும் முன்னெடுப்பதற்கு பங்களிப்பு வழங்கி வருகிறது. இந்த அனைத்து சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளும் சமூகங்களுக்கு பெறுமதி வாய்ந்த தகவல்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன. யூனியன் மனிதாபிமானம் மற்றும் அதன் செயற்பாடுகள் அனைத்தும் பொது மக்களுக்கு மிகவும் முக்கியமான தகவல்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், மூன்று நோய்களான தலசீமியா, டெங்கு மற்றும் நீரிழிவு போன்றவற்றை தவிர்த்துக் கொள்வது பற்றி விளக்கங்கள் வழங்கப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகள் மற்றும் கிளை வலையமைப்புகளின் பங்களிப்பினூடாக யூனியன் மனிதாபிமானம் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. நாடு முழுவதிலும் 2018ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் விழிப்புணர்வு செயற்பாடுகள் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டிருந்தன.

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியினூடாக ஆண்டின் முதல் அரையாண்டில் முன்னெடுக்கப்பட்டிருந்த செயற்பாடுகளில், சுமார் 70 இல்லங்களுக்கு விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதனூடாக டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பிலான மாற்றங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருந்தன. பாடசாலைகளில் விசேட நிகழ்ச்சிகள்முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், மாணவர்கள் மத்தியில் செயல்நிலை மாற்றங்களை ஏற்படுத்துவது நோக்கமாகும். 6000 க்கும் அதிகமான மாணவர்கள் கைகோர்த்து இந்த திட்டத்தில் பங்கேற்றிருந்ததுடன், மூன்று திட்டங்கள் இந்த நடவடிக்கையினூடாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முதலாவது டெங்கு மாதிரி செயற்திட்டம் இலங்கையில் கடந்த ஆண்டின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கிருலப்பனை சித்தார்த்தபுர வீடமைப்புத்திட்டத்தில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும், 2018 முதல் அரையாண்டு காலப்பகுதியில் நீரிழிவு தவிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

தலசீமியா நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்து வருகிறது. பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுச் சமூக அமைப்புகள் போன்றவற்றின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பில் இந்த திட்டங்கள் அமைந்திருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X