Freelancer / 2024 ஜூன் 17 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் வங்கி 24/7 ஸ்மார்ட் வங்கியியல் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் தனது டிஜிட்டல் வலயங்களை அண்மையில் தனது தலைமையகத்திலிருந்து ஆரம்பித்து, புறக்கோட்டை, ராஜகிரிய, கண்டி, கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளிலும் விஸ்தரித்துள்ளது. இவற்றினூடாக வாடிக்கையாளர்களுக்கு பண வைப்புகள், பண மீளப் பெறுகைகள், அட்டையில்லாத வைப்புகள், யூனியன் வங்கி கணக்குகளினுள் நிதிப் பரிமாற்றங்கள், யூனியன் வங்கி கிரெடிட் கார்ட் கொடு்பனவுகள் மற்றும் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். புதிய டிஜிட்டல் வலயங்கள் இரத்மலானை, காலி மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களிலும் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளன.
வங்கியின் டிஜிட்டல் மாற்றச் செயற்பாட்டு மூலோபாயத்தில் முக்கிய படியாக இந்த டிஜிட்டல் வலயங்கள் அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை மேம்படுத்தி மற்றும் டிஜிட்டல் பிரசன்னத்தை விரிவாக்கம் செய்வதாகவும் அமைந்துள்ளது. வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான அர்ப்பணிப்பின் அங்கமாக, பிந்திய புத்தாக்கங்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை வாடிக்கையாளர்கள் மத்தியில் கொண்டுவருவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை வங்கி மேற்கொண்ட வண்ணமுள்ளது.
4 minute ago
37 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
37 minute ago
47 minute ago
1 hours ago