2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான வளர்ச்சியை பதிவு

Gavitha   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

காப்புறுதி வியாபாரத்தில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான போக்கை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் மொத்த தேறிய தவணைக்கட்டண வழங்கல்களில் 22 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்ததுடன், இந்தப்பெறுமதி 3.9 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. 2015 இல் பதிவாகிய 1.5 பில்லியன் ரூபாய் இலாபத்துடன் ஒப்பிடுகையில் 119 மில்லியன் ரூபாய் நடப்பு ஆண்டில் பதிவாகியிருந்தது.

கடந்த ஆண்டின் இலாப பெறுமதி என்பது, பொது காப்புறுதி வியாபாரத்தின 78 சதவீதமான பங்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தமை காரணமாக, பெருமளவு அதிகரித்திருந்தது. இந்த கொடுக்கல் வாங்கல்களைத் தவிர்ந்து, குறித்த காலப்பகுதியில் இலாபம் என்பது முன்னைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

2016 ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தக் காலப்பகுதிக்கான ஆயுள் காப்புறுதி வியாபாரத்திலிருந்து கிடைக்கும் மேலதிக பெறுமதி என்பது கணக்கிடப்படவில்லை. இந்தப்பெறுமதி வருட இறுதியில் ஒன்றுதிரட்டி கவனத்தில் கொள்ளப்படும்.

2016 ஜூன் 30ஆம் திகதியன்று, நிறுவனத்தின் ஆயுள் காப்புறுதி நிதியத்தின் பெறுமதி ரூ. 28 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. இது ஆரோக்கியமான மூலதன போதுமை விகிதத்தை வெளிப்படு த்தியிருந்ததுடன், வியாபாரத்தின் நிதி உறுதிப்பாட்டையும் பிரதிபலித்திருந்தது.

தொடர்ச்சியான 4ஆவது ஆண்டாக புசநயவ Pடயஉநள வழ றுழசம© (புPவுறு) நிறுவனத்தினால் பணியாற்றுவதக்கு சிறந்தப் பணியிடங்களில் ஒன்றாக யூனியன் அஷயூரன்ஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், நட்ட ஈடுகள் வழங்கல் சேவைகள் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கம் ஆகியவற்றுக்கான விருதுகளை, முதலாவது காப்புறுதித்துறை விருதுகள் வழங்கும் நிகழ்வில் வெற்றியீட்டியிருந்தது.
நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கமைய, 'யூனியன் மனுஷ்யத்வய' என்பதற்கமைய தேசிய டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டம் ஓகஸ்ட் 6ஆம் திகதி முன்னெடுக்கப்ப ட்டிருந்தது. மாவட்ட சுகாதார அமைச்சு அதிகாரிகளின் உதவியுடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. டெங்கு நோயை கட்டுப்படுத்துவது மற்றும் தவிர்ப்பது தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்காக அமைந்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X