2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

யாழ். இளைஞர்களுக்கு வலுவூட்டும் களனி சக்தி

Gavitha   / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண குடாநாட்டைச் சேர்ந்த இளைஞர்களை, இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களாகத் தரமுயர்த்தும் களனி கேபிள்ஸின் ‘களனி சக்தி’ ஒரு வருட நிபுணத்துவம் வாய்ந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முதல் கட்டம் பூர்த்தியடைந்துள்ளது.  

இந்தப் பயிற்சிகளைப் பூர்த்தி செய்த முதல் தொகுதி மாணவர்களுக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன.  

இந்நிகழ்வில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான சிரேஷ்ட பேராசிரியர். வசந்தி அரசரட்னம், களனி கேபிள்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி. ஏ.அற்புதராஜா, களனி கேபிள்ஸ் பிஎல்சி சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் அனில் முனசிங்க மற்றும் களனி சக்தி கற்கை பணிப்பாளர் ரி. திருவரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.  

இலத்திரனியல் தொழில்நுட்ப பிரிவில் சுய தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பாடசாலை கல்வியை பூர்த்தி செய்த சுமார் 50 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், இல்லங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வயர்களை பதிவது தொடர்பான அறிவும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் ஏற்பாடு செய்திருந்தது.  

களனி சக்தி முதல்தொகுதி 50 மாணவர்கள் தமது கற்கைகளை பூர்த்தி செய்துள்ளதைத் தொடர்ந்து, இரண்டாம் தொகுதிக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களிலிருந்து மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X