Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 07 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம், தமது ஊழியர் எம்.பி.டி. ரணுக பிரபாத், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் Taekwondo தங்கப் பதக்கம் வென்றமையை கௌரவித்திருந்தது.
இந்தக் கௌரவிப்பு நிகழ்வில் பீப்பள்ஸ் லீசிங் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், ரனுக பிரபாத் பெருமைக்குரிய விருதையும், பணப்பரிசையும் பீப்பள்ஸ் லீசிங் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
நேபாளத்தின் காத்மண்டு நகரில் இடம்பெற்ற 13 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், Taekwondo போட்டியில் 23 வயதுக்குட்பட்ட ஆடவர் Pumse பிரிவில் இலங்கை சார்பில் போட்டியிட்டிருந்தார். இதில் ஆண்கள் தனிநபர், இரட்டையர் ஆகிய பிரிவுகளில் தங்கப் பதக்கங்களையும், குழுநிலை போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் ரணுக வெற்றியீட்டினார்.
தெற்காசிய போட்டிகளில் Taekwondo போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த போட்டியாளர் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றமை இது முதலாவது சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago