Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 25 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
லங்கா டைல்ஸ் பிஎல்சி மத்தியளவு உற்பத்தித்துறை பிரிவில் தங்க விருதை சுவீகரித்துள்ளது. சமூக கலந்துரையாடல் மற்றும் பணியிட ஒன்றிணைவு சிறப்பு 2017 விருதுகள் வழங்கும் நிகழ்வில் இந்த விருதை லங்கா டைல்ஸ் பிஎல்சி பெற்றிருந்தது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இலங்கை தொழில் திணைக்களத்தினால் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், தொழிற்துறை ஊழியர் உறவுகளை மேம்படுத்துவதில் அதிகளவு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கு நிறுவனங்களை இந்த விருதுகள் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன.
சர்வதேச மட்டத்தில் உள்நாட்டு நிறுவனங்கள் போட்டியிடக்கூடிய பணியிட சூழலை ஏற்படுத்துவதும் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வின் மற்றுமோர் இலக்காகும்.
சமூக கலந்துரையாடல்கள், வினைத்திறன் அடிப்படையிலான ஊழியர் மதிப்பாய்வு விதிமுறைகள், ஊழியர் நலன்புரிச் செயற்பாடுகள், சமூகப் பொறுப்புணர்வான செயற்பாடுகள், நிறுவனத்தினால் மற்றும் ஊழியர்களால் வென்றெடுக்கப்பட்ட விருதுகளின் தரம், தன்மை மற்றும் பணியிட உரிமைகளை உணர்த்தும் கொள்கைகள், சமூகப் பாதுகாப்பு, தொழிலில் ஏற்றுக்கொள்ளத்தக்க பாலின சமத்துவம் ஆகியவற்றுடன் நிதிசார் பெறுபேறுகள் போன்றவற்றின் அடிப்படையில் நிறுவனங்கள், இந்த விருது வழங்கலில் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தன. இவை அனைத்திலிருந்தும் லங்கா டைல்ஸ் பிஎல்சி வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
லங்கா டைல்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் மஹேந்திர ஜயசேகர கருத்துத்தெரிவிக்கையில், “நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலான செயற்பாடுகளைக் கொண்டுள்ள லங்கா டைல்ஸ், சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாறிவரும் வாடிக்கையாளர்களின் தேவைகள் போன்றவற்றில் எப்போதும் கவனம் செலுத்தியிருந்தது. எமது ஊழியர்களுக்கு வெகுமதிகள் நிறைந்த தொழில் உயர்வு வாய்ப்புகளை வழங்கியுள்ளதுடன், அவர்களின் வினைத்திறன் அடிப்படையிலான சம்பளக்கொடுப்பனவுகளையும் மேற்கொண்டு வருகின்றோம். ஊழியர்களின் அர்ப்பணிப்பையும், ஈடுபாட்டையும் தொடர்ந்து உச்ச மட்டத்தில் பேணி, எமது கொள்கைசார் இலக்குகளை எய்துவதற்காக நாம் சிறந்த கலந்துரையாடல்களை அவர்களுடன் பேணி வருகின்றோம்.தேசிய மற்றும் சர்வதேச ஊழியர் நியமங்களைப் பின்பற்றுவதில் நாம் எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளோம், அத்துடன், அவர்களுக்குப் பண்பார்ந்த பணியிட சூழலை ஏற்படுத்தத் தரமான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி, நேர்மையான கொடுப்பனவுகளையும் வழங்கி வருகின்றோம்.எமது ஊழியர்கள் மத்தியில் உலகத்தரமான மனித வளங்கள் கொள்கைகளை நாம் பின்பற்றி தொழிற்துறையில் காணப்படும் ஏனைய நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago