2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 22 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இளைஞர் ஒருவர் படு காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (21) கொடிகாமம் கச்சாய் வீதியில்  இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்ணும், இளைஞர் ஒருவரும் மோட்டார் சைகிளில் கச்சாய் வீதி ஊடாக  கொடிகாமம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை  அதே திசையில் சட்டவிரோத மணல் ஏற்றிக்கொண்டு சென்ற உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் மீது மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தையடுத்து அந்த உழவு இயந்திரம் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் மிருசுவிலைச் சேர்ந்த நந்தகுமார் ஜெயலக்சுமி என்ற 46 வயதுடைய குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார்.  

சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X