Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 மே 17 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கோப்பரேஷன் லிமிட்டெட்டின் பெருமளவான பங்குகளை கொள்வனவு செய்வதில் சிங்கப்பூர் ஹொஸ்பிட்டல்ஸ் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் உரிமையாண்மையின் கீழ் இயங்கி வரும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸின் உரிமையாண்மையை தனியார் துறைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானிக்கும் பட்சத்தில் அதன் மீது முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளதாக சிங்கப்பூர் ஹொஸ்பிட்டல்ஸ் தொடர் அறிவித்துள்ளது. இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பாடல் பேரம் பேசலை முன்னணி அரசியல் பிரமுகர் ஒருவர் முன்னெடுத்து வருவதாகவும், மேலதிக உரையாடல்களுக்காக சிங்கப்பூரின் அதிகாரிகள் அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். உள்நாட்டு நிறுவனங்களான ஹேமாஸ் மற்றும் சொஃப்ட்லொஜிக் போன்றனவும் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.
ஆசிரி ஹொஸ்பிட்டல் குழுமத்தின் உரிமையாண்மையைக் கொண்டுள்ள சொ‡ப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ், இந்த வாய்ப்பு மிகவும் அரிதானது என தெரிவித்துள்ளது. ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் குழுமத்தின் உரிமையாண்மையைக் கொண்டுள்ள ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பங்குகளை அரசாங்கம் விற்பனை செய்ய தீர்மானித்தால் அவற்றை கொள்வனவு செய்வதில் தாம் ஆர்வமாக உள்ளதாக அறிவித்திருந்தது. இலங்கை அரசாங்கத்தின் மறைமுக கட்டுப்பாட்டினுள் இயங்கும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸின் 54.61 பங்குகள் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் வசம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
42 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago