2021 மே 17, திங்கட்கிழமை

லைக்கா மொபைல் வலையமைப்பு

Editorial   / 2020 மார்ச் 10 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பைக் கொண்ட லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile network) தனது ஸ்பெயின் நாட்டின் தொலைத்தொடர்பு வலையமைப்பை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. 

ஸ்பெயின் நாட்டின் மிகப்பெரிய பொதுத் தொலைத்தொடர்பு நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ள Masmovil நிறுவனம், லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஸ்பெயின் நிறுவனத்தை, இலங்கை ரூபாய் 7,600 கோடி (76 பில்லியன்) பெறுமதியில் கொள்வனவு செய்ததன் மூலம் ஸ்பெயினில் லைக்காவின் நீண்ட கால இருப்பு தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

2010ஆம் ஆண்டு ஸ்பெயினில் தன்னை அறிமுகம் செய்த லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile) மிகக் குறைந்த கட்டணத்தில் தனது உயர்தரமான சேவையை விரிவுபடுத்தியது. 

இதன்மூலம் 1.5 மில்லியன் பாவனையாளர்களைத் தன்னகத்தே கொண்ட பிரமாண்டமான MVNO சேவையைக் கொண்ட நிறுவனமாக லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile) உருவெடுத்தது. 

இதுவே ஸ்பெயினின் மாஸ்மோவில் (Masmovil) நிறுவனம் லைக்கா நிறுவனத்தின் ஸ்பெயின் வலையமைப்பைக் கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக அமைந்தது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .