2026 மே 07, வியாழக்கிழமை

லீஸிங் உடன்படிக்கை

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கியும் DIMO வும் செய்து கொண்ட பிரத்தியேகமான வணிக ஊக்குவிப்புத் திட்டம் ஒன்றின்படி மேர்சிடிஸ் பென்ஸ் வாகனங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடிகளையும் ஏனைய அனுகூலங்களையும் வழங்குவதென தீர்மானித்துள்ளன.

வாகனங்கள் இருப்பில் இருக்கும் வரை, முதலில் வருவோரை முதலில் கவனித்து குத்தகைப் பெறுமதியில் குறைந்த வருட வட்டி வீதமான  w13 சதவீதத்தில் விசேட வாகனக் காப்புறுதி விருப்பத் தேர்வில் கொமர்ஷல் வங்கியிலிருந்து லீசிங் வழங்கப்படும்.

கொமர்ஷல் வங்கியின் முகாமைப் பணிப்பாளர், பிரதம நிறைவேற்றதிகாரி ஜெகன் துரைரட்ணம் இத்திட்டம் பற்றி தெரிவிக்கையில் கூறியதாவது, 'மேர்சிடிஸ் பென்ஸ் சொகுசு, தரம், ஸ்டைல் ஆகியவற்றைத் தெளிவாக வரையறை செய்வதுடன் தனது சொந்த சக்தியில் இயங்கும் ஒரு வாகனமாகும். எமது லீசிங் வாடிக்கையாளர்கள் இத்தகைய மதிப்பான வாகனம் ஒன்றைத் தமது சொந்தமாக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குவதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். இரண்டு முன்னோடி நிறுவனங்கள் இந்த வழங்கலில் ஒன்றிணைவதால் வாடிக்கையாளர்களுக்கு தரம், நம்பகமான சேவை ஆகியன குறித்து உத்தரவாதம் செய்யப்படுகிறது.' என்றார்.

Diesel & Motor Engineering PLC குழும் பிரதம நிறைவேற்றதிகாரி குஹநாத் பண்டிதகே கருத்து தெரிவிக்கையில், மேர்சிடிஸ் பென்ஸில் நாம் தினமும் சந்தையில் வழங்கப்படக் கூடிய  அதிசிறந்த அனுகூலங்களையே வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம் என்பதையும் னுஐஆழுவுக்கும் கொமர்ஷல் வங்கிக்குமிடையிலான இந்தக் கூட்டு முயற்சி இரண்டு நிறுவனங்களினதும் அதிசிறந்த அனுகூலங்களை எமது வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் உறுதிப்படுத்துகிறது என்று கூறினார்.

தொடர்ச்சியாக 6 வருடங்களாக உலகின் அதிசிறந்த 1000 வங்கிகளில் ஒன்றாக இடம்பிடித்து வரும் இலங்கையின் ஒரேயொரு வங்கியான கொமர்ஷல் வங்கி இலங்கையில் 251 கிளைகளையும் 635 ஏரிஎம்களையும் கொண்ட வலையமைப்பை இயக்கி வருகிறது.

இலங்கையின் அதிசிறந்த வங்கி, தலையாய வணிக வங்கி, அதிஉறுதி வாய்ந்த வங்கி, அதிகமாக மதிக்கப்படும் வங்கி என பல்வேறு உள்நாட்டு, சர்வதேச நிறுவனங்களாலும் வெளியீடுகளாலும் பல வருடங்களாக மதிப்பிடப்பட்டு பல விருதுகளை வென்றெடுத்துள்ளது. மேலும், இலங்கையின் அதிசிறந்த நிறுவனங்களில் ஒன்று என்று இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் பல வருடங்களாக தரப்படுத்தப்பட்டு வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .