Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 01 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கியின் நிலைபெறுதகு தன்மையை மேம்படுத்துவதற்கான நாடளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக வட பகுதியில் அமைத்துள்ள மாவட்டங்களான யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் 10,000 மரக்கன்றுகளை நடும் திட்டமொன்றை கொமர்ஷல் வங்கி ஆரம்பித்துள்ளது.
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான 600 ஏக்கர் காணிகளிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் ஊடாக செல்லும் ஏ9 வீதியின் ஓரங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் இலாப நோக்கற்ற சுற்றுச்சூழல் அமைப்பான க்ரீன் லேயர் உடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட வளாகத்தில் இடம்பெற்ற இத்திட்டத்தின் முதற்கட்ட அறிமுக நிகழ்வில் கொமர்ஷல் வங்கியின் தலைவர் ஷர்ஹான் முஹ்சீன், முகாமைத்துவப் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க, பிரதம செயற்பாட்டு அதிகாரி எஸ். பிரபாகர் மற்றும் வங்கியின் பெருநிறுவன மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவப் பிரதிநிதிகள் பங்குபற்றினர்.
பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகளில் தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி டி.கேதீசன், விவசாய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கே.பஹீரதன் மற்றும் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ஏ.கனேஸ்வரன் ஆகியோர் அடங்குவர்.
திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களில் ஒரு மாதத்திற்குள் 3,000 மரக்கன்றுகள் நடப்படும் என்றும், மூன்றாவது மற்றும் இறுதி கட்டத்தில் 4,000 மரக்கன்றுகள் நடப்படும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது. இத்திட்டமானது கிளிநொச்சி மாவட்டத்தின் சூழலியல் நிலப்பரப்பை மேம்படுத்துவதோடு உள்நாட்டு சமூகத்தில் சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
நாடு முழுவதும் 100,000 மரக்கன்றுகளை நடுவதற்கான கொமர்ஷல் வங்கியின் 'மரங்கள் நிறைந்த தேசத்திற்கான' முயற்சிக்கு இந்தத் திட்டம் ஆதரவளிக்கிறது. பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல மலைத்தொடரில் உள்ள கந்தேகம காடுகளுக்குச் சொந்தமான 100 ஹெக்டேயர் பரப்பளவிலான சீரழிந்த வாழ்விடத்தில் வங்கி மீண்டும் காடுகளை வளர்க்கும் முயற்சியினை மேற்கொண்டு வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
50 minute ago
54 minute ago
57 minute ago