2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வணக்கத் தலங்களிலும் விளம்பரம் தேடும் நம்மவர்கள்

Gavitha   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இந்து, பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய சமயங்கள் தொடர்பிலான திருவிழாக்களும் சமய நிகழ்வுகளும் வருடத்தின் வௌவேறு காலப்பகுதிகளில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

குறிப்பாக மடு மாதா ஆலய திருவிழா, நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா, கண்டி எசல பெரஹரா போன்றவற்றைக் குறிப்பிட முடியும். இவற்றின் போது அடியார்கள் பக்திப்பரவசத்துடன், இறையருள் நாடி கடல் கடந்து கூட வருகை தருகின்றனர்.

இந்நிலையில், இந்த பண்டிகைகளைத் தமக்கு சாதகமாக பயன்படுத்தி குறித்த பகுதிகளில் அளவுக்கு மிஞ்சிய வகையிலான விளம்பர செயற்பாடுகளை நம்நாட்டு நிறுவனங்கள் முன்னெடுப்பதை எம்மால் கடந்த காலங்களில் அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கான விளம்பர சந்தை என்பது 2009 ஆம் ஆண்டின் பின்னர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாண நகரத்தை விட, பெருமளவான விளம்பர பதாதைகளை நல்லூர் கந்தசுவாமி கோயிலைச் சூழ்ந்துள்ள 2 கிலோ மீற்றர் சுற்றுப்பகுதியில் அவதானிக்க முடிகின்றது. இவற்றின் மூலம் உள்ளூராட்சி சபைகளுக்கு வருமானம் கிடைக்கின்ற போதிலும், ஆன்மீக ஸ்தலத்தை அண்மித்து அவை காட்சிப்படுத்தப்படுவது தவிர்க்கப்படலாம். மேலும் திருவிழாக் காலங்களில் ஒன்றுகூடும் மக்களை திசை திருப்பும் வகையிலான ஊக்குவிப்பு பிரச்சார செயற்பாடுகளை முன்னெடுப்பதையும் தவிர்த்துக் கொள்வது சிறந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X