Gavitha / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலோன் பிஸ்கட் நிறுவனம் (CBL) அதன் வருடாந்த விநியோகத்தர் மாநாட்டையும், 2016 இன் நட்சத்திர விருது வழங்கலையும் அத்திடிய, ஈகிள்ஸ் லேக்சைட்டில் சமீபத்தில் நடத்தியது. பணிப்பாளர் சபையினர், வெளிக்கள விற்பனை அதிகாரிகள், நாட்டின் சகல பகுதிகளையும் சேர்ந்த விநியோகத்தர்கள், வர்த்தகப் பங்காளிகள், வெளிநாட்டுக் கிளைகளின் பிரதிநிதிகள், சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகள் உட்பட அதிக எண்ணிக்கையானோர் அங்கு சமூகமளித்திருந்தனர்.
நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்பை வழங்கியமைக்காகவும், சவாலுக்குட்பட்ட ஆண்டுக்கான விற்பனை இலக்கைப் பெற்றமைக்காகவும், சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் விற்பனை அதிகாரிகள் மற்றும் விநியோகத்தர்கள் வழங்கியப் பங்களிப்பிற்கு விருது வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல வருட காலமாக (CBL) உற்பத்திப் பொருட்களை விநியோகித்து வந்த விற்பனையாளர்களும் இவ்விழாவின் போது பாராட்டப்பட்டுள்ளனர். ஊழியர்களுக்கான சென்ற நிதியாண்டின் பதவி உயர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சி நிரலின் மற்றொரு முக்கிய அம்சம், 2016/17ஆம் ஆண்டுக்கான சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் தொனிப்பொருள் பற்றி அறிவிப்பதாகும். நிறுவனத்தை உயர் நிலைக்குக் கொண்டு செல்வதில் 'அடுத்த மட்டம்-அதியுயர் இலக்கு' என்ற மந்திரத்தை எதிர்வரும் வருடங்களில் ஊழியர்கள் கடைப்பிடிக்கவிருக்கின்றனர்.
சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் CBL குழும் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி ஷியாமலி விக்கிரமசிங்க அங்கு உரைநிகழ்த்துகையில், 'எமக்குச் சொந்தமான வர்த்தக அடையாளங்களில் மாத்திரம் எமது வெற்றி தங்கியிருக்கவில்லை என்றும், ஊழியர்கள் விநியோகத்தர்கள், பொருள் வழங்குநர்கள் ஆகியோரின் அர்ப்பணித்த நடவடிக்கையிலேயே தங்கியுள்ளது' என்றும் தெரிவித்தார்.
'அதிக எண்ணிக்கையான எமது வர்த்தக அடையாளங்கள் அவற்றுக்கான பிரிவுகளில் முதலிடத்தில் உள்ளன. இத்துடன் நாம் திருப்தியடைந்துவிடவில்லை. ஆண்டுக்கான தொனிப்பொருளில் தெரிவிக்கப்பட்ட வகையில் அடுத்த மட்டததுக்கு செல்வதே எமது நோக்கமாகும்.
இயற்கையான, திருப்தியளிக்கும் தரம் கொண்ட மற்றும் போஷாக்குள்ள 100ம% இலங்கை உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதே எமது இலக்காகும். வாடிக்கையாளர்களினதும், சமூகத்தினரதும் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யும் புதிய உற்பத்திப் பொருட்களை அறிமுகம் செய்வதுக்கான ஆராய்ச்சியிலேயே நாம் தொடர்ச்சியாக முதலீடு செய்கின்றோம்' என்றும் அவர் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago