2025 ஜூலை 30, புதன்கிழமை

வருமான வரியை விஸ்தரிக்கத் திட்டம்

Gavitha   / 2016 நவம்பர் 21 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் வருமான வரி அறவிடும் முறையை விஸ்தரிப்பதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கல்யாணி தஹநாயக்க தெரிவித்தார்.   

கடந்த 22 மாதங்களில் 600,000 ஆக காணப்பட்ட வருமான வரி கோப்புகள் தற்போது 1.4 மில்லியன் கோப்புகளாக அதிகரித்துள்ளதாகவும் ஆனாலும், நாட்டில் வருமான வரி செலுத்தக்கூடிய மக்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடும் போது 9 சதவீதமான மக்கள் மட்டுமே வரி செலுத்துகின்றனர். இது போதுமானதாக இல்லை. எனவே, இந்த நிலை தொடர்பில் நாடு முழுவதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வெவ்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .