2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வலி இல்லாத ஈரல் ஸ்கானிங் தீர்வுகளை வழங்கும் சியோக்கா

Gavitha   / 2016 ஜனவரி 18 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழ்க்கை முறை மற்றும் மக்கள் தொகைசார் மாற்றங்கள் போன்றவற்றின் காரணமாக தொற்றா நோய்களின் பரவல் இலங்கையர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், இலங்கையின் நகரப் பகுதிகளில் மதுபாவனை அல்லாத ஈரல் அழற்சி (NAFLD) நோய் பரவுவது தொடர்பிலும் அதிகளவு ஆதரங்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.

நோயாளர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகர்யத்தை குறைக்கும் வகையிலும் வைத்தியர்களுக்கு ஈரல் தொடர்பாக காணப்படும் நோய் நிலைகளை நுட்பமாக மற்றும் துளையிடாமல் கண்டறியக்கூடிய மருத்துவ இனங்காணல் முறையொன்றை சியோக்கா பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் துறை நிறுவனமான சியோக்கா ஹெல்த் அறிமுகம் செய்திருந்தது. இகோசென்ஸ் இனால் உற்பத்தி செய்யப்படும், உலகளாவிய ரீதியில் காணப்படும் ஈரல் தொடர்பான படம் மூலமான இனங்காணல் பேடன்ட் தொழில்நுட்பத்தைக் கொண்ட FibroScan எனும் நவீன இனங்காணல் முறை இவ்வாறு சியோக்கா ஹெல்த் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிமுக நிகழ்வில், முன்னணி வைத்திய நிபுணர்கள், கதிர்வீச்சியல் மருத்துவர்கள் (ரேடியோலொஜிஸ்ட்), இரப்பை குடலியல் மருத்துவர்கள் (கஸ்ரோஎன்டெரொலொஜிஸ்ட்) மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்கள், எகோசென்ஸ் பிரதிநிதிகள், ஸ்பெயின்  நாட்டின் மெட்ரிட் நகரின் Hospital UniversitarioPuerta de Hierro இன் Gastroenterology and Hepatology திணைக்களத்தின் உதவி தலைமை அதிகாரி பேராசிரியர். ஜோஸ் லுயிஸ் கலீஜா (Cayeha) பனேரோ (Panero) மற்றும் சியோக்கா நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவத்தின் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஈரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு மருத்துவ ரீதியில் சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதற்கு ஆரம்பக் கட்ட இனங்காணல்களுக்கான புத்திசாதுர்யமான தீர்வாக, இந்த புதிய தொழில்நுட்பம் அமைந்துள்ளது.NAFLD தொடர்பான இனங்காணல் மற்றும் சிகிச்சைகளை வழங்குவது தொடர்பில் காணப்படும் சவால்கள் பற்றி ராகம, களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின், மருத்துவ பிரிவின் பேராhசிரியர் ஜனக டி சில்வா கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் வயது வந்தவர்கள் மத்தியில் காணப்படும் பொதுவான பிரச்சினையாக NAFLD அமைந்துள்ளது. இந்தப்பிரச்சினை இளைஞர்கள் மத்தியிலும் தற்போது தலைதூக்க ஆரம்பித்துள்ளது' என்றார்.

பேராசிரியர் டி சில்வா தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், 'ஈரல் அழற்சியை இனங்காணபதற்கு அல்ட்ராசவுண்ட் முறை பிரதானமாக பரந்தளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், இந்த முறை மூலமாக ஈரலில் காணப்படும் கொழுப்பின் அளவை சரியாக அளவிட முடியாது. அத்துடன் ஃபைபுரோசிஸ் இனங்காணலையும் மேற்கொள்ள முடியாது. biopsy என்பதை நாம் தங்க நியமமாக (gold standard) கருதினாலும், தவறுகள் மற்றும் பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் காணப்படுகின்றன' என்றார்.

'FibroScan மூலமாக ஃபைபுரோசிஸ் அளவை அளவிட முடியும் என்பதுடன், நோயாளர்களை ஈரல் அழற்சி மற்றும் NASH (non-alcoholic steatohepatitis) என வேறுபடுத்திக் கொள்ளவும் உதவியாக அமைந்திருக்கும். ஹெபடைடிஸ் B மற்றும் C போன்ற Cirrhosis வரை கொண்டு செல்லக்கூடிய கொடிய ஹெபடைடிஸ் நிலைகளையும் எம்மால் இனங்கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கும். முன்கூட்டியே இனங்கண்டு கொள்ள முடிவதால், முறையாக சிகிச்சைகளை வழங்கக்கூடியதாக இருக்கும்' என மேலும் குறிப்பிட்டார்.

ஈரல் சம்பந்தமான நோய் நிலையை வெற்றிகரமாக இனங்கண்டு, சிகிச்சையளிப்பதற்கு துரிதமாகவும் வினைத்திறன் பொறிமுறை அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. இது தொடர்பில் பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவிக்கையில், 'ஈரல் biopsy என்பது தங்க நியமமாக (gold standard) அமைந்திருந்தாலும், அது தொடர்பில் மருத்துவத்துறையில் பெருமளவு வாதங்கள் இடம்பெற்ற வண்ணமுள்ளன. நோயாளி பெருமளவு மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். ஈரல் ஃபைபுரோசிஸ் கண்டறிவதற்கு துளையிடாத பரிசோதனை முறை ஒன்றுக்கான தேவை கட்டாயமாக காணப்படுகிறது. தற்போது காணப்படும் bio markers மற்றும் அல்ட்ரா சவுன்ட் அடிப்படையிலான FibroScan முறை ஆகியவற்றில் FibroScan முன்னிலை வகிக்கிறது. இவற்றில் முக்கியமானது யாதெனில், இடர் குறைந்த இனங்காணல் முறையாக அமைந்திருப்பது, எவ்வித இடர்களும் இல்லை' என்றார்.

'உலகின் சிறந்த வைத்தியர்களை நாம் கொண்டுள்ளோம் என்பதில் நான் உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளேன். இவர்கள் சகல ஆளுமைகளையும் கொண்டிருந்த போதிலும், அவசியமான சாதனங்களை கொண்டிருக்கமாட்டார்கள். இந்தப் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தமைக்காக சியோக்கா நிறுவனத்துக்கு நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என பேராசிரியர் அர்ஜூன மேலும் குறிப்பிட்டார்.

Echosens என்பது, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டு நிறுவனமாகும். ஈரல் தொடர்பில் மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் FibroScan ஐயும் உற்பத்தி செய்கிறது. vibration-controlled transient elastography எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த FibroScan தயாரிக்கப்படுகிறது. அல்ட்ராசவுன்ட் முறையைப் போலவே FibroScan செயற்படுவதுடன், ஈரலில் காணப்படும் வடுவின் (ஃபைபுரோசிஸ்) அளவை அளவிடுவதற்கு ஒலி அலைகளை இது பயன்படுத்துகிறது. பெறுபேறுகளை இலக்கங்களில் வழங்குகின்றமை விசேட அம்சமாக அமைந்துள்ளது.

இந்த தொழில்நுட்பம் தொடர்பில் Echosens கிழக்கு ஐரோப்பா மற்றும் யூரோ ஏசியா பிராந்தியத்துக்கான முகாமையாளர் கமிலி மென்கியு (Camille Manceau) கருத்துத் தெரிவிக்கையில், 'ஈரல் தொடர்பில் நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறோம். Biopsy முறைக்கு மாற்றீட்டு முறை ஒன்றை கண்டுபிடிக்க வேண்டிய தேவை எழுந்தது. வைத்தியர்களுக்கு ஏற்கெனவே வழங்கியுள்ள சாதனங்கள் வரிசையில் மேலும் பெறுமதி சேர்ப்பதற்கு திட்டமிட்ட Echosens, அதற்காக FibroScan ஐ அறிமுகம் செய்திருந்தது. இது வலியற்ற மற்றும் உடலில் துளையிடாத மருத்துவ முறை என்பது குறிப்பிடத்தக்கது.

'ஒரே வேளையில் இரு பெறுபேறுகளை வழங்கும் வகையில் FibroScanஅமைந்துள்ளது. இதில் ஒரு முறை ஃபைபுரோசிஸ் உடன் தொடர்புடைய விறைப்பு நிலை மற்றும் Steatosis உடனான Controlled Attenuation Parameter (CAP) என்பன அமைந்துள்ளன. FibroScan மூலமாக நோயாளர்கள் மத்தியில் நோய் நிலை குறித்து இனங்கண்டு, அதற்கேற்ற சிகிச்சைகளை வழங்குவது மற்றும் கண்காணிக்கக்கூடியதாக இருக்கும்' என்றார்.

60க்கும் அதிகமான ஆய்வுப் பத்திரங்களை தயார்ப்படுத்தியுள்ளதுடன், சிகிச்சை முறைகளில் நவீன நுட்பங்களின் பிரயோகம் தொடர்பில் அனுபவம் கொண்டுள்ள ஸ்பெயின் நாட்டின் மெட்ரிட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலீஜா துளையிடாத ஈரல் ஃபைபுரோசிஸ் மதிப்பீடு பற்றி உரையாற்றியிருந்தார்.

பேராசிரியர் கலீஜா கருத்துத் தெரிவிக்கையில், 'ஈரல் பரிசோதனைகளில் காணப்படும் தங்க நியம (gold standard) முறையாக biopsy அமைந்துள்ளது. ஆனாலும் அது பூரணமற்றது. வரையறைகளைக் கொண்டுள்ளது. துளையிடாத முறையில் முன்னெடுக்கப்படுகிறது. ஃபைபுரோசிஸ் குறித்து மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு இந்தச் சாதனங்களின் நோய் தீரல் கணிப்பு (prognostic) பெறுமதி முக்கியமானதாகும். இது போன்றதொரு சாதனமாக FibroScan அமைந்துள்ளது' என்றார்.

இலங்கைச் சந்தையில் FibroScan ஐ அறிமுகம் செய்ததன் ஊடாக, நோயாளர்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளுக்கான சுகாதாரத் தீர்வுகளை வழங்குவதில் சியோக்கா முன்னணியில் திகழ்கிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X