Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
S.Sekar / 2022 டிசெம்பர் 16 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வஷொகு 'Washoku' (和食) என்பது பாரம்பரிய ஜப்பானிய உணவாக அமைந்திருப்பதுடன், ஜப்பானிய கலாசாரத்தின் உள்ளம்சமாக அமைந்துள்ளது. இந்த உணவில் சோறு குவளையுடன் பக்க உணவு வகைகள் தயாரிக்கப்பட்டிருக்கும். கஞ்சி எழுத்துருவான “和” என்பது ஒருமைப்பாட்டைக் குறிக்கின்றது. எனவே, ஒவ்வொரு உப உணவு வகைகளும் ஒன்றுடன் இணைந்திருப்பது முக்கியமானதுடன், சுவைகளிடையே சிறந்த சமநிலையை தோற்றுவிக்கும். மக்களுக்கு உணவை பாராட்டுவதற்கு உதவுவது மாத்திரமன்றி, உணவு வகைகளுடன் உயர்ந்த மட்ட ஈடுபாட்டையும் ஏற்படுத்துகின்றது.
தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்துடன் இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் இணைந்து, வஷொகு உணவு வகைகளை தயாரிப்பது பற்றிய விளக்கங்களை முன்னெடுத்திருந்தது. இந்நிகழ்வு 2022 அண்மையில் இடம்பெற்றது. கராகே (வறுத்த சிக்கன்), சிக்கன் நன்பன் (சிக்கனுடன் வினாகிரி மற்றும் டார்டர் சோஸ்) மற்றும் சிக்கன் டெரியாக்கி (சுவீட் சோய் சோஸ் – பூசப்பட்ட சிக்கன்) போன்றன தயாரிக்கப்பட்டிருந்தன. இளைஞர் சேவைகள் சம்மேளனத்தில் உணவு தயாரிப்பு கற்கைகளை தொடரும் மாணவர்களும், விரிவுரையாளர்களும் மற்றும் தலைவர்களும் இந்த விளக்கமளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சுவைகளுக்கிடையே ஒருமைப்பாடு மற்றும் சமநிலை என்பதை அடிப்படையாகக் கொண்டு வஷொகு அமைந்திருப்பதால், இலங்கை மற்றும் ஜப்பானிடையே 70 வருடங்களாகத் தொடரும் நட்புறவில் காணப்படும் பிரதான பெறுமதிகள் இந்நிகழ்வில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
22 minute ago
23 minute ago