Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 22 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘ஆண்டின் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர் 2017’ விருது வழங்கும் நிகழ்வை அறிமுகம் செய்யப் பெண்கள் வர்த்தக சம்மேளனம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மாற்றத்துக்காக குரலெழுப்பும் மற்றும் பெண் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் இலாப நோக்கற்ற அமைப்பாக பெண்கள் வர்த்தக சம்மேளனம் திகழ்கிறது.
இரு வருடங்களுக்கு ஒரு தடவை ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வாக ‘ஆண்டின் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்’ விருது வழங்கும் நிகழ்வு அமையவுள்ளது. இதனூடாக, உலகை மாற்றியமைத்த சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு கௌரவிப்பு வழங்கப்படும். பெண்களின் வர்த்தக சமூகத்தை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளதுடன், அவர்களின் வியாபாரத்தை மேம்படுத்துவது மற்றும் ஏனைய பெண்களுக்கு பின்தொடர்வதற்கான சிறந்த செயன்முறைகளைக் கட்டியெழுப்பவும் முன்வந்துள்ளது.
விருதுகள் வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து சகல விண்ணப்பதாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்படும். இதன்போது தமது வியாபாரத்தின் அளவை மதிப்பிடுவது மற்றும் சமூகத்தில் ஆலோசகர்கள் மற்றும் முன்மாதிரியானவர்களாகத் தமது பெறுமதியை அதிகரித்துக் கொள்வது போன்றன மேற்கொள்ளப்படுகின்றன.
“நாம் இன்று ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் இலங்கையின் சிறந்த பெண் தொழில்முயற்சியாளர்களைத் தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம். அவர்களை இனங்கண்டு, அவர்களின் திறமைகளுக்குக் கிடைக்க வேண்டிய கௌரவிப்பையும் நன்மதிப்பையும் ஊக்குவிப்பையும் பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்” என பெண்கள் வர்த்தக சம்மேளனத்தின் தலைமை அதிகாரி சத்துரி ரணசிங்க தெரிவித்தார்.
ஐந்து பிரிவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதை வழங்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் வைபவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நுண் அளவிலான வியாபாரங்கள், சிறியளவிலான வியாபாரங்கள், நடுத்தரளவிலான வியாபாரங்கள், பாரியளவிலான வியாபாரங்கள் மற்றும் மிகப்பாரியளவிலான வியாபாரங்கள் போன்றன இதில் அடங்குகின்றன. பிரதான பிரிவுகளின் கீழ், ஒவ்வொரு விண்ணப்பதாரியும் விருதைப் பெறுவதற்கான தகைமையைக் கொண்டிருப்பார். ‘ஆண்டின் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்’, ‘ஆண்டின் சிறந்த இளம் தொழில் முயற்சியாளர்’ மற்றும் ‘ஆண்டின் சிறந்த ஆரம்ப நிலை வியாபாரம்’ போன்ற விருதுகள் இவற்றில் வழங்கப்படவுள்ளன. மொத்தமாக 31 பெண் தொழில்முயற்சியாளர்கள் 21 விருதுகளைப் பெற்றுக் கொள்வார்கள்.
சத்துரி தொடர்ந்து தெரிவிக்கையில், “மாற்றுத்திறன் படைத்த பெண் தொழில்முயற்சியாளர் விருதுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, நாம் மற்றுமொரு புதிய விருதுப் பிரிவை இந்த ஆண்டு அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். நேர்த்தியான திறன் படைத்த ஆண்டின் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர் எனும் விருது, இந்த ஆண்டு வழங்கப்படவுள்ளது. இந்தப் பிரிவு மிகவும் விசேடத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. பொருளாதார வலுவூட்டலில் காணப்படும் சிறந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் இது அமைந்திருக்கும்” என்றார்.
இதில் பங்கேற்பதற்கான தகைமையைப் பெற, விண்ணப்பதாரி, வியாபாரத்தின் ஸ்தாபகராக, ஊக்குவிப்பு பிரசார செயற்பாடுகளை முன்னெடுப்பவராக, மூடப்படும் நிலையிலுள்ள வியாபாரத்தை மீட்டவராக இருக்கலாம். மூன்று ஆண்டுகளுக்கு வியாபாரம் செயல் நிலையில் காணப்பட வேண்டும். இலங்கையின் விதிமுறைகளுக்கமைய பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago