Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 09 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
Huawei இந்த ஆண்டில், சாதகமான விற்பனைப் பெறுபேறுகளைப் பதிவாக்கியுள்ளதுடன், Huawei Y Series திறன்பேசிகளுக்கு, இலங்கையில் உயர்ந்த மட்டக் கேள்வி நிலவுகின்றமை, இதன் மூலமாக வெளிப்பட்டுள்ளது.
Huawei Y Series திறன்பேசி உற்பத்தி வரிசையில் Huawei Y5 Prime, Y7 Pro மற்றும் Y9 ஆகியன அடங்கியுள்ளதுடன், நிறுவனத்தின் ஆராய்ச்சியின் பிரகாரம், உள்நாட்டில் திறன்பேசி ஆர்வலர்கள் மத்தியில் அவற்றின் பிரபலம் வளர்ச்சி கண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
திறன்பேசியைக் கொண்டிருக்க வேண்டும் என ஆசைப்படுகின்றவர்களின் தேவைகளுக்கு ஏற்ற, பல்வேறு சிறப்பம்சங்களை இப்புத்தாக்கமான சாதனங்கள் கொண்டுள்ளதுடன், Huawei Y Series அறிமுகமாகிய பின்னர், அதற்குப் பலத்த வரவேற்பு தொடர்ந்தும் கிடைத்து வருகின்றது.
Y5 Prime, Y7 Pro மற்றும் Huawei யின் நவீன 18:9 ‘FullView Display’ தொழில்நுட்பத்துடனான Y9 ஆகியன பாவனையாளர்களுக்கு அதிசிறந்த பார்வை அனுபவத்தை வழங்குகின்றன.
Y7 Pro மற்றும் Y9 ஆகியன Android 8 Oreo தொழில்நுட்பத்தில் இயங்குவதுடன், Y5 Prime ஆனது Android Oreo 8.1.0 தொழில்நுட்பத்தில் இயங்குகின்றது.
Huawei Device இன் உள்நாட்டுத் தலைமை அதிகாரியான பீட்டர் லியு கூறுகையில், “இந்த ஆண்டின் முற்பகுதியில் அறிமுகமாக்கப்பட்ட Huawei Y Series திறன்பேசிகள் இலங்கைச் சந்தையில் சிறப்பான பெறுபேறுகளைக் காண்பித்து வருகின்றன. இச்சாதனங்கள் 3020mAh முதல் 4000mAh வரையான மின்கல ஆற்றலைக் கொண்டுள்ளதுடன், இரட்டை ‘சிம்’ தெரிவு, முன்புற, பின்புற கமெராக்கள் ஆகிய சிறப்புத் தொழில்நுட்பத் தெரிவுகளைப் பயனர்களுக்கு வழங்குகின்றன. இந்த சிறப்புத் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட புத்தாக்கங்கள் சந்தையில் எம்மை ஒரு வலுவான செயற்பாட்டாளராகத் திகழச் செய்கின்றன” என்று குறிப்பிட்டார்.
8 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jul 2025