Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 27 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் விவசாய உற்பத்திகளை நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள கொரிய முதலீட்டு நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.
‘கொ-லங்கா’ என்ற இந்நிறுவனத்தின் இலங்கைக் கிளை, கொழும்பு உலக வர்த்தக மைய கட்டடத்தொகுதியின் கிழக்கு கோபுரத்தில் (18) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சேதன விவசாய உற்பத்திகளை இலங்கை விவசாயிகளிடத்திலிருந்து நேரடியாகவே பெற்றுக்கொள்ள இந்த முதலீட்டு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
தம்புளை உள்ளிட்ட பகுதிகளைச் சேதன உற்பத்தி மையமாக மாற்றியமைப்பதற்கான முதலீடுகளையும் மேற்கொள்ளத்தயாராக இருப்பதாக குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘கோ-லங்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த முதலீட்டு நிறுவனம், வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறியவகை விவசாய இயந்திரங்களைக் கண்டுபிடிப்பது தொடர்பிலான அறிவூட்டலையும் முதலீடுகளையும் வழங்கத் தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் உள்வாங்கபடும் விவசாயிகளுக்கு உலக அளவில் பயன்படுத்தக்கூடிய பணப்பறிமாற்றம் செய்யும் வங்கி அட்டைகளைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
3 minute ago
1 hours ago
1 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago
1 hours ago
21 Jul 2025