S.Sekar / 2022 ஜூலை 01 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
உட்கட்டமைப்பு கருத்திட்டக் கண்காணிப்பான் எனும் ஒன்லைன் டாஷ்போர்டை வெரிட்டே ரிசேர்ச் மும்மொழியில் தொடங்கியுள்ளது. தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு ட்ரில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுள்ள 60 பாரிய உட்கட்டமைப்புக் கருத்திட்டங்கள் தொடர்பில் முன்கூட்டியே தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதை இந்த டாஷ்போர்ட் கண்காணிக்கிறது.

2016ம் ஆண்டின் 12ம் இல. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, ஐ.அ.டொ. 100,000 (வெளிநாட்டு நிதியுதவித் திட்டங்கள்), ரூ. 500,000 (உள்ளூரில் நிதியளிக்கப்படும் திட்டங்கள்) ஆகியவற்றை விட அதிக தொகையைக் கொண்ட திட்டங்கள் குறித்து, அவை தொடங்குவதற்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னதாக அதற்குப் பொறுப்பான அமைச்சர் முன்கூட்டியே தகவல்களை வெளிப்படுத்த வேண்டும். தகவல்கள் டிஜிட்டல் இலத்திரனியல் வடிவத்தில் அமைச்சின் வலைதளத்தில் தமிழ், சிங்களம் முடியுமானால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட வேண்டும்.
கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பான அமைச்சின் வலைதளத்திலோ அரச முகவரகத்தின் வலைதளத்திலோ ஐந்து பரந்த வகைகளின் கீழ் 40 வெவ்வேறு வகையான தகவல்கள் கிடைப்பதை இந்த டாஷ்போர்ட் மதிப்பிடுகிறது. மேலும், தகவல் அறியும் கோரிக்கைகளுக்குப் பதிலாக வெரிட்டே ரிசேர்ச்சுக்குக் கிடைக்கப்பெற்ற பல்வேறு கருத்திட்டங்களின் கடன் உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்களுக்கான அணுகலையும் இந்த டாஷ்போர்டு வழங்குகிறது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இந்த டாஷ்போர்டில் இருந்து எக்ஸெல் தாள் வடிவில் தகவல் மற்றும் பகுப்பாய்வு தரவுத்தளத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு சில காரணங்களாக அமைவது வெளிப்படைதன்மையற்ற முடிவுகள் எடுக்கப்படுவதும் ஊழல் நிறைந்த திட்டங்களை பாரிய கடன் சுமைகளுடன் செயல்படுத்துவதுமாகும். பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த தகவல்களை முன்கூட்டியே வெளிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மற்றும் அரச முகவரகங்களுக்கு இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உட்கட்டமைப்பு கருத்திட்டக் கண்காணிப்பானின் நோக்கமாகும். மேலும் உட்கட்டமைப்புத் திட்டங்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும் செயல்முறையில் பொதுமக்கள் பங்குபெறுவதற்கான வாய்ப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
26 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago