2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வைத்தியசாலைகள், கரையோரங்களைப் பாதுகாக்க இரு அரசாங்கங்கள் உதவி

Gavitha   / 2016 மே 15 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வைத்தியசாலைகளை மேம்படுத்துவதற்காக சீன அரசாங்கம் வழங்கியிருந்த 85 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்துவதற்கு இலங்கை அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

'மாகாண வைத்தியசாலைகள் உள்ளடங்கலாக தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு அவசியமான கட்டங்களை நிறுவுதல் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொடுத்தல் ஆகியன முன்னெடுக்கப்படவுள்ளன' என அமைச்சரவை அங்கிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதையும் சேர்ந்த வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த 85 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்துவதற்கான கோரிக்கை சுகாதாரத்துறை மற்றும் சுதேச மருந்துப் பொருட்களுக்கான அமைச்சர் ராஜித சேனாரட்னவினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதேவேளை இலங்கை கடற்கரை பாதுகாப்பு செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் இந்தக் கடற்கரையோர திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இரு பெற்றோல் படகுகளை அன்பளிப்பு செய்ய ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது. இதற்காக சுமார் 2,400 மில்லியன் ரூபாய் பெறுமதியான தொகையை JICA ஊடாக வழங்க ஜப்பானிய அரசு முன்வந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X