Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 24 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
விம் வாழ்வுக்கு பிரகாரம் என்ற நுகர்வோர் ஊக்குவிப்பு அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன், யுனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற பரிசுகள் வழங்கும் நிகழ்வில், 2 மில்லியன் ரூபாய் வரையான தமக்கான பரிசுகளை வெற்றியாளர்கள் பெற்றுச் சென்றுள்ளனர்.
பெண்களின் தொழில்முயற்சி சார்ந்த திறன்களைப் பிரகாசிக்கச் செய்யும் ஒரு முன்னெடுப்பான விம் வாழ்வுக்கு பிரகாசம் என்ற நுகர்வோர் ஊக்குவிப்பு, வலுவூட்டல் என்ற தனது இலட்சியத்தை சிறப்பாக முன்னெடுத்து, ரூ. 100,000 பெறுமதியான மாபெரும் பரிசுகளை அல்லது ரூ. 10,000 பெறுமதியான தனிப்பட்ட பரிசுகளை வெல்வதற்கு மக்களுக்கு வாய்ப்பளித்திருந்ததுடன், இது அவர்கள் தமது தொழில் முயற்சிகள் தொடர்பான கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கு பங்களிப்பாகவும் அமையும்.
இப்போட்டியில் நுழைந்துகொள்வதற்கு, நுகர்வோர், விம் சவர்க்காரம் ஒன்றைக் கொள்வனவு செய்து, அதன் மேலுறையின் உட்புறத்திலுள்ள தனித்துவமான குறியீட்டு இலக்கத்தை எஸ்எம்எஸ் (SMS) செய்யுமாறு கேட்கப்பட்டிருந்தனர். ஒருவர் இத்தனை குறியீட்டு எண் நுழைவுகளை மட்டுமே அனுப்பலாம் என்று எவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கவில்லை. எனினும், ஒரு மேலுறைக்கு ஒரு நுழைவு மட்டும் என்ற அடிப்படையில் அனுப்பி வைப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். மாபெரும் பரிசுகளை வென்றுகொண்ட ஆறு வெற்றியாளர்களின் விபரங்கள் வருமாறு, டி.எச். சமந்திகா மதிரத்ன, செல்வி. ஜெயசிங்க ஆராச்சிகே தேஷினி சத்துரிகா குமாரிஹாமி, டி.ஜி. யசபால, ஆர்.எம். பிரியந்திகா, அல்வான்கே சஞ்சீவ மற்றும் ஜே. சமிலா டில்ஹானி. மேலும், 150 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் தலா 10,000 ரூபாய் பணப்பரிசுகளைத் தமதாக்கியிருந்தனர்.
“இலங்கையில், இல்லத்தரசிகளுடன் நாம் கொண்டுள்ள மிக நீண்ட காலப் பிணைப்பின் அடையாளமாகவும், அவர்களது வாழ்வில் பிரகாசத்தை ஏற்படுத்தவுமே நாம் இந்த ஊக்குவிப்பை அறிமுகப்படுத்தியிருந்தோம். பெண்கள் மத்தியில் தொழில்முயற்சிகள் தொடர்பான அவர்களது கனவுகளை நனவாக்குவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், அதற்குத் தேவையானவற்றை அவர்களுக்கு கிடைக்கச்செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எமது வெற்றிகரமான பயிற்சிப்பட்டறை நிகழ்வுகளைத் தொடர்ந்து, அதனை ஒரு படி மேலே கொண்டுசெல்லும் வகையில், அவர்களின் கனவுகளை நனவாக்குவதற்காக, நிதியியல்ரீதியாகவும் உதவ விரும்பினோம். இதற்கு அவர்கள் மத்தியிலிருந்து கிடைக்கப்பெற்ற பலத்த வரவேற்பானது, இந்த ஊக்குவிப்பு மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமைக்குச் சான்று பகருகின்றது. அவர்களுடைய வாழ்வில் சிறிய ஆனால் நீண்ட தூரம் பலனளிக்கும் வகையிலான நல்விளைவை ஏற்படுத்த முடிந்துள்ளதையிட்டு மிகவும் பெருமையடைந்துள்ளோம்,” என்று யுனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் வீட்டுப் பராமரிப்பு உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைப்படுத்தல் முகாமையாளரான ஃபஸ்லான் ஃபைஸால் குறிப்பிட்டார்.
6 hours ago
9 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
20 Sep 2025