2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வெள்ள நிவாரண பணிகளில் துணை நிற்கும் பரந்தன் கெமிக்கல்ஸ்

George   / 2016 ஜூன் 03 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனமான பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பனி நிறுவனமானது கொலன்னாவை நகரசபை மற்றும் கொடிகாவத்தை- முல்லேரியா பிரதேசசபைகளுடன் இணைந்து வெள்ளத்தின் பின்னரான நிவாரண நடவடிக்கைகளுக்கு, நிறுவனத்தின் கூட்டாண்மை சமூக பொறுப்புக்களின்   அடிப்படையில் துணைநிற்கின்றது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சுத்தம் செய்தல் மற்றும் தொற்று நீக்குவதனை மேற்கொண்டு சிறந்த சுகாதார நிலைமைகளை பேணுவதன் மூலமாக நெருப்புக்காய்ச்சல், ஈரல் அழற்சி, வயிற்றோட்டம், வாந்திபேதி போன்ற தொற்று நோய்கள் பரவும் சாத்தியப்பாட்டை கட்டுப்படுத்துவதுடன் இல்லாதொழிக்கலாம்.

இலங்கையின் இரசாயன தொழிற்துறையின் முன்னோடியும்இ அரச நிறுவனமுமான  பரந்தன் கெமிக்கல்ஸ் நிறுவனமானது, இவ் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வெளிற்றும் தூளை அன்பளிப்பாக விநியோகிப்பதன் மூலம் சமூகத்தின் மீதான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு பொருத்தமான நேரத்தில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வெளிற்றும் தூளானது தொற்று நீக்குவதற்கும் மற்றும் நீர் சுத்திகரிப்பிலும் பிரதானமாக பயன்படுத்தப்படும் இரசாயனமாகும்.

பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பனி நிறுவனமானது தற்பொழுது கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் இயங்கி வருவதுடன் வெளிற்றும் திரவமென பொதுவாக அழைக்கப்படுவதுடன் தொற்றுநீக்கியாகவும் பெரிதும் பயன்படுத்தப்படும் சோடியம் ஹைபோகுளோரைட்டை உற்பத்தி செய்கிறது.

பரந்தன் கெமிக்கல்ஸ் நிறுவனத்தினால் சந்தைப்படுத்தப்படும் இரசாயனங்கள் பிரதானமாக நீர்ச்சுத்திகரிப்பிலும் சவர்காரம் மற்றும் சலவைத்தூள் உற்பத்தியிலும் பயன்படுத்தப்பபடுவதனூடாக பரந்தன் கெமிக்கல்ஸ் நிறுவனமானது சிறந்த சுகாதாரத்துக்கும், சிறந்த வாழ்க்கைத் தரத்துக்கும் உறுதுணையாக அமைகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X