Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்டார் ஹோல்டிங்ஸ் இன்டர்நஷனல் பிரைவட் லிமிடெட், இலங்கையில் சுப்பர் 8 தொழில்நுட்பத்தில் அமைந்த ஸ்டார்லைட் ஹேர்பல் டிடர்ஜன்ட் பவுடரை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.
நிறுவனத்தின் பணிப்பாளர் சுலைமான் சிராஜ் இந்த அறிமுக நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில், “புத்தாக்கச் செயற்பாடுகளை முன்னெடுப்பதை நாம் ஒருபோதும் இடைநிறுத்தப் போதில்லை, அத்துடன் எமது வாடிக்கையாளர்களுக்காக சிறந்த தயாரிப்புகளை அறிமுகம் செய்வதையும் தொடர்ந்து முன்னெடுப்போம். அந்த உறுதி மொழிக்கமைய நாம் தொடர்ந்து இயங்குவதுடன், வீடுகளுக்கு புரட்சிகரமான மற்றுமொரு தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளோம்” என்றார்.
ஸ்டார்லைட் ஹேர்பல் டிடர்ஜன்ட் பவுடர் கண்கவர் பச்சை நிற பொதியில் அடங்கியுள்ளதுடன், வெளியே புலப்படக்கூடிய வகையில் இந்தப் பொதி காணப்படுவதால், உள்ளிருக்கும் பச்சை நிற சலவை பவுடரை வாடிக்கையாளர்கள் பார்வையிடக்கூடியதாக இருக்கும். இதனூடாக இலங்கையின் முதலாவது வர்ணம், பொதியிடல் மற்றும் சேர்மானம் ஆகியவற்றை ஒரே விதமாக மேற்கொண்டுள்ள இலங்கையின் முதலாவது தயாரிப்பாகவும் அமைந்துள்ளது.
ஸ்டார் ஹோல்டிங்ஸ் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் ஹஷான் ஹபுதந்திரி கருத்துத் தெரிவிக்கையில், “‘சந்தையில் முதல் அறிமுகம்’ எனும் புத்தாக்கமான தயாரிப்பினூடாக சந்தையை ஆக்கிரமிக்கக்கூடிய எமது திறனை, நாம் எமது போட்டியாளர்களை பின்தொடராமல், பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பின்தொடர்வதால் உறுதியாக கொண்டிருக்கக்கூடியதாக உள்ளது. புதிய தயாரிப்புகளினூடாக சந்தையை தொடர்ந்து ஆக்கிரமிப்பதுடன், நுகர்வோரின் உள்ளங்களில் நிலைத்திருந்து, அவர்கள் செல்லுமிடமெங்கும் ஸ்டார் தயாரிப்புகளை நாடச் செய்யும் வகையில் அமைந்திருப்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.
ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் தலைமை அதிகாரி திருமதி. எஸ். வாஹிட் கருத்துத் தெரிவிக்கையில், “பயன்படுத்தி நம்புங்கள்’ எனும் தொனிப்பொருளுடன் நாம் ஆரம்பித்திருந்தோம். தற்போது எமது வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான நம்பிக்கை வாய்ந்த தெரிவாக எமது தயாரிப்புகள் திகழ்வதால், இந்த தொனிப்பொருளை நாம் ‘நம்புங்கள்’ என்பதற்கு மாற்றியமைத்துள்ளோம்” என்றார்.
இந்த அறிமுக நிகழ்வில் சிறப்பு உரையை ஆற்றுவதற்காக முன்னணி சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார மூலோபாய சிந்தனையாளரான நந்தன ஏ. விக்ரமகே மற்றும் TVS லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago